உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாணர்

81

பல்வகைப் பறைகளையும் அடித்துக்கொண்டு ஒரே குலமாயிருந்த மண்டைப்பாணர் பிற்காலத்துத் தொழில், கருவி, ஒழுக்கம் முதலியவற்றின் வேறுபாட்டால் பல்வேறு பிரிவாய்ப் பிரிந்து போயினர்.

66

'துடியன் பாணன் பறையன் கடம்பன்என் றிந்நான் கல்லது குடியுமில்லை”

என, மாங்குடிகிழார் தொழிற் குடிமக்களை கூறியுள்ளனர். துடி உடுக்கு.

(புறம்.335)

நால்வகைப்படுத்துக்

பாட்டிற்குக் கூத்து துணைத்தொழிலாதலின், பாணர் கூத்தும் டிவந்தனர். வயிரியர், செயிரியர், மதங்கர் என்னும் பெயர்களும், விறலி என்னும் பெண்பாற்பெயரும் கூத்துப் பற்றியவே. கூத்தரைக் குறிக்கும் கண்ணுளர், கண்ணுளாளர் என்னும் பெயர்களும் பாணர்க்குரியன. கண்ணுள்

என்பது கண்ணை உள்ளே வைத்தாற்போல் நுணுகி நோக்கும்

நுண்வினைக்கூத்து. சிலப்பதிகாரத்தில்(ப. 169) “கண்ணுளாளர்-மதங்கர், ஆவார் பெரும்பாணர்” என்று அடியார்க்குநல்லார் கூறியிருப்பதை நோக்குக. விறலி என்பவள் விறல்பட ஆடுபவள். விறலாவது மனத்தின் இயல்பு புறத்தே தோன்றச் செய்யும் திறம். இது வடமொழியிற் சத்துவம் எனப்படும். கணவன் பாணனும் மனைவி விறலியுமாயிருந்து இருவரும் இசைந்து அரசரிடம் சென்று பாடியாடுவது பெருவழக்கு.

பாணர்க்குச் சிறுபான்மை தையல் தொழிலுமுண்டு. சிலப்பதி காரத்தில் (இந்திர விழா. 32) 'துன்னகாரர்' என்னும் பெயர்க்குப் பாணர் என்று பொருள் கூறியுள்ளார் அரும்பதவுரைகாரர். துன்னம்-தையல்.

பாணர்க்குச் சொல்லுவதும் ..6005...

என்று காளமேகரும் பாடியுள்ளார்.

""

பாணர்க்குரியது பெரும்பாலும் இசைத்தொழிலாதலின், பல்வகைப் பறைகட்கும்(அல்லது மேளங்கட்கும்) தோற்கட்டுதல் அவர் வினையே என்பது சொல்லாமே விளங்கும்.

இசைத்தொழில் பாணரெல்லார்க்கும் எக்காலத்தும் இசையாமையின், அவருள் ஒரு சாரார் மீன்பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டனர்.

"பச்சூன் பெய்த சுவல்பிணி பைந்தோல்

கோள்வல் பாண்மகன் தலைவலித் தியாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண்கொளீஇக் கொடுவாய் இரும்பின் மடிதலை புலம்பப்

பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை

என்று பெரும்பாணாற்றுப்படையிலும்,

66

"மீன்சீவும் பாண்சேரி'

""

59

என்று மதுரைக்காஞ்சியிலும் கூறியிருத்தல் காண்க.

(283-7)

(