உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

பண்பாட்டுக் கட்டுரைகள்

பாணரென்பார் குலமுறைப்படி (இன்று ஆதிதிராவிடர் என்று அழைக்கப்படுவாருள் ஒரு சாராராகிய) பறையரேயாவர். இஃது அவருடைய பறையடிக்குந் தொழிலாலும், தலைவி தான் தன் தலைவன் மேற் சினந்திருக்கும்போது அது தணிக்கவந்த யாழ்ப்பாணனை நோக்கிப் “புலை ஆத்தின்னி போந்ததுவே" (திருக்கோ. 386) என்று வெகுண் டுரைப்பதில் பாணர் ஆ வின் (பசுவின்) இறைச்சியை உண்பதாகக் குறித்திருத்தலாலும், அதற்குப் பாணன் புலந்துரைப்பதில் (387),

CC

வில்லாண் டிலங்கு புருவம் நெரியச்செவ் வாய்துடிப்பக் கல்லாண் டெடேல்கருங் கண்சிவப் பாற்று கறுப்பதன்று பல்லாண் டடியேன் அடிவலங் கொள்வன் பணிமொழியே'

என்று தன்னை மிகவும் தாழ்த்திருப்பதாலும் அறியப்படும்.

""

காலஞ்சென்ற எம். சீனிவாச ஐயங்கார் அவர்களும் தமது ஆராய்ச்சி நூலில் பாணர் பறையருள் ஒரு பிரிவினர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

பாணர் இங்ஙனம் தாழ்ந்த வகுப்பினராயிருந்தும், முத்தமிழுள் இசை, நாடகம் என்னும் இரண்டையும் வளர்ப்பவர் அவராதலாலும், இசையில் (சங்கீதத்தில்) தமிழர்க்கும் தமிழரசர்க்கும் இருந்த பேரார்வத்தினாலும், ஆரிய வொழுக்கம் ஆழ வேரூன்றாத பண்டைக்காலத்தில் குலப் பிரிவினைப் பிற்காலத்திற்போல் அவ்வளவு முறுகாமையானும் அவர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பும் அரசர் அவைக்களங்களிலும் அரசியர் அந்தப்புரங்களிலும் தடையில்லா நுழைவும் இருந்தன. அறிவாற் சிறப்பே யன்றிப் பிறப்பாற் சிறப்பு அக்காலத்தில் இருந்திலது.

இனம்.

அரசரைப் “பாணர் ஒக்கல்" என்று திருக்கோவை(400) கூறும்; ஒக்கல்

குரல்வாய்ப் பாணரொடு திரிதருமரபின் கோவலன் போல",

"பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து”

என்று, பெருஞ்செல்வனும் பெருங்குடி வணிகனுமான கோவலன் பாணரொடு கூடித்திரிந்தமை சிலப்பதிகாரங் கூறும்.

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியைப் பாடிய புறப்பாட்டில், "பாண்சுற்றம் சூழ்வதாக நினது நாட்காலத்து மகிழ்ந்திருக்கும் ஓலக்கம்" (Durbar) (29, உரை) என்று கூறியுள்ளார்.

பாணர் அரசரிடம் சென்று பாடி யாழ் வாசித்து அவர்க்கு இன்ப மூட்டுவதும், அவர்மீது அரசியர்க்குள்ள ஊடலை(கோபத்தை)த் தணிப்பதும், அரசருடன் போர்க்களத்திற்குச் சென்று வெற்றி நேர்ந்தவிடத்து வெற்றிக் கூத்தாடுவதும் இறந்துபட்ட அரசர்க்கும் வீரர்க்கும் இரங்கிப் பாடுவதும், அவரை நினைவுகூர்தற்கும் வழிபடுதற்கும் நாட்டிய நடுகற்களை வணங்கிச் செல்வதும் வழக்கம்.