உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாணர்

83

அரசரும் விடிந்தெழுந்தபின் பாணரை வருவித்து, அவர்க்குச் சிறந்த பரிசிலளிப்பதும், அவரை இனத்தாருடன் உண்பிப்பதும், போர்க்களத்து வருவாய்களைப் போர் செய்து வெற்றிபெற்ற பின்பும், பகைவர் செல்வங்களை (வெற்றியுறுதிபற்றி)ப் போர் செய்யப் போகு முன்பும் அவற்றிற்கு உரிமையாக்குவதும் வழக்கம்.

66

வரையா வாயிற் செறாஅ திருந்து

பாணர் வருக பாட்டியர் வருக

...வயிரியர் வருகென

இருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம் கொடிஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி"

என்று மதுரைக்காஞ்சியில், தலையாலங்கானத்துச் செழியன் விடியற்காலத்துப் பாணரை வருவித்துப் பட்டது.

"பொறிமயிர் வாரணம் பொழுதறிந் தியம்பப் பொய்கைப் பூமுகை மலரப் பாணர்

கைவல் சீறியாழ் கடனறிந் தியக்க இரவுப் புறம்பெற்ற ஏம வைகறை

வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்”

(அ.748-52)

செருவென்ற நெடுஞ் பரிசளித்தமை கூறப்

(புறம்.398)

என்று புறப்பாட்டில் சேரமான் வஞ்சன் அரண்மனையில் வைகறை (விடியல்)தோறும் பாணர் யாழ்வாசித்தல் கூறப்பட்டது. வாரணம் = கோழி.

"பாணன் கூத்தன் விறலி.......

தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்

(செய். 182)

என்று தொல்காப்பியத்தில் பாணர் அரசியரிடம் அவர்க்கு அவர்தம் கணவர் மீதுள்ள ஊடலை அல்லது புலவியைப் போக்குதல் கூறப்பட்டது. ஊடல் முதிர்ந்தது புலவி.

புறப்பொருள் வெண்பாமாலையில், 144ஆம் சூத்திரத்தில், பாணர் போர்க்களத்தில் வீரருடன் தேரின் பின் நின்று ஆடுவதும், 207ஆம் சூத்திரத்தில் அவர் போர்க்களத்திற் பெற்ற பரிசிலைப் புகழ்ந்து கூறுவதும், 137ஆம் சூத்திரத்தில் அவர் போரில் இறந்த வீரர்க்கு இரங்கி விளரிப்பண் பாடுவதும், 252ஆம் சூத்திரத்தில், அவர் இறந்த வீரர்க்கு எடுத்த நடுகல்லைத் தொழுவதும் கூறப்பட்டன.

அரசர் பாணர்க்குப் புலவுச்சோறு, இனிய மது, பொன்னரி மாலை, வெள்ளிநாராற் றொடுத்த பொற்றாமரைப்பூ, களிறு, குதிரை பூட்டிய தேர் முதலியவற்றை நிரம்பக் கொடுத்ததாகப் புறநானூற்றிற் பல பாடல்களுள. இவற்றுள், பொன்னரி மாலையை விறலி என்னும் பாணிச்சிக்கும் பொற்றாமரைப் பூவைப் பாணனுக்கும் சூட்டுவது வழக்கம்.