உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

மொழிநூற் கட்டுரைகள்

மதி- மதம் = மிகுதி, பெருமை, வலிமை, வளம், செருக்கு, மதநீர். மதம் - மதன் = மிகுதி, வலிமை, செருக்கு.

மத்தம் = மதம். மத்தமா மதம். மத்தமா = யானை. மத்தம் - மதம் என்றுமாம்.

மத்தன்

=

உயுத். 44).

கொழுத்தவன். “மத்தனிராவணன் கொதித்தான்” (இராமநா.

மத்தம், மத்தன் என்பன மத்த என்று வடமொழியில் திரியும்.

மதம்-மதர். மதர்த்தல்=மிகுதல், செழித்தல், கொழுத்தல், மதங் கொள்ளுதல், செருக்குதல்.

பல பொருள்கள் அல்லது வழிகள் அல்லது கருத்துக்கள் கலத்தலால், கலக்கமும் மயக்கமும் உண்டாகும். மத்தித்தல்=கலத்தல், மருந்து கலத்தல்.

மத்தம் = மயக்கம். மத்தம்-மதம்-மதன்=கலக்கம்.

ஒ.நோ: குல-குலவு-கலவு, கலவுதல் = கலத்தல். குலவுதல்=கூடுதல். குல-கல-கலங்கு-கலக்கு-கலக்கம். முய-முயங்கு-முயக்கம். முயங்குதல்=தழுவுதல், கலத்தல். முய-மய-மயங்கு-மயக்கு- மயக்கம்=கூட்டம், கலக்கம். மயத்தல்=மயங்குதல். "மயந்துளே னுலக வாழ்க்கையை” (அருட்பா, அபயத்திறன். 14).

மயக்கக் கருத்தினின்று, உணர்வின்மை (மூர்ச்சை), வெறி, கோட்டி (பைத்தியம்), காமம் ஆகியகருத்துக்கள் தோன்றும்.

மத்தம்=மயக்கம், குடி வெறி, கோட்டி, ஊமத்தை.

மத்தம் - மத்தன்

மதம்=குடிவெறி, கோட்டி.

=

மதிமயங்கியவன், கோட்டிபிடித்தவன். மத்தம்-

மத்து=ஊமத்தை. மதத்தல்=மயங்குதல்.

மத்து, மத்தம், மத்தன் என்னும் இம்முச்சொல்லும் வட மொழியில் மத்த எனத் திரியும்; மத என்பது Mada எனத் திரியும்.

செருக்கு, யானை மதம் ஆகிய இரு கருத்தும் மயக்கக் கருத்தினின்று தோன்றியதாகவுங் கொள்ளலாம். ஓ-நோ: களி-களிறு. களித்தல்=கள்ளுண்டு வெறித்தல், மயங்குதல்.

நில வொளியால் கோட்டியுண்டாகுமென்று பண்டைக் காலத்தில் கீழ்நாட்டிலும் மேல் நாட்டிலும் ஒரு கருத்திருந்ததால், திங்களுக்கு மயக்கந் தருவது என்னும் பொருள்பற்றி ஒரு பெயருண்டாயிற்று.

மத்து-(மத்தி)-மதி: அல்லது மதம்-மதி=திங்கள். Luna (Latin) = திங்கள், Lunacy (Eng) = கோட்டி.

மதி=மாதம் (மதியால் அளக்கப்படும் கால அளவு). மதி-மாதம்-மாஸ் (வ).