உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மதி விளக்கம்

65

மதிப் பெயரினின்றே மாதப் பெயர் உண்டாகும். திங்கள்=மதி, மாதம். (Moon-month). மதி என்னும் சொற்கு வடமொழியில் திங்கட் பொருள் இல்லை. இயல்பாகத் தகரம் சகரமாகத் திரியுமேயன்றிச் சகரம் தகரமாகத் திரியாது. ஆதலால், மாதம் என்பது தென் சொல்லாதல் தெளிவு. ஆயினும், ஆரிய மயக்கால் தமிழர் பேதுறுவது அவர் பேதைமையே. ஏற்கெனவே திங்கட் சொல் மதியையும் ஒரு கிழமையையும் குறித்தலால், அதை மேலுமொரு பொருளில் வழங்கி மயக்குதல் வழுவாகும். மயக்கந் தரும் கள் அல்லது தேன் இனித்தலால், மயக்கக் கருத்தில் மதுக் கருத்தும் தோன்றும்.

மத்து-மட்டு=தேன், கள்.

மத்து-மது-மதுர்-மதுரி-மதுரம்.

மது-மதம்=தேன். “மதங்கமழ் கோதை” (சீவக. 2584). மது=தேன், கள், இனிமை, அதிமதுரம்.

மது-மதி=அதிமதுரம்.

மட்டு என்பது Madya என்றும், மது என்பது Madhu என்றும் வடமொழியில் திரியும்.

இனி, முத்து என்பதன் வல்வடிவான முட்டு என்னும் சொல், ஒரு பொருள் இன்னொரு பொருளை முட்டுதலால் அறியப்படும் இயக்க முடிவை அல்லது வழி எல்லையை உணர்த்துதலால், சேர்தல் அல்லது பொருந்துதற் கருத்தில் எல்லை அல்லது அளவுக்கருத்தும் தோன்றும். முகத்தாற் பொருந்துதல் முத்துதலும் தலையாற் பொருந்துதல் முட்டுதலும் ஆதலின், அவற்றின், மென்மை வன்மை குறிக்க, முறையே தகர டகரம் வந்தனவென அறிக. இங்ஙனமே முட்டியால் முதுகில் அறைதல் குத்துதலும் மண்டையில் அறைதல் குட்டுதலும் ஆதல் காண்க. ஆயினும், முதற்காலத்தில் தகரச் சொல்லே டகரச்சொற் பொருளையுங் குறித்தது.

முட்டுதல்=முடிதல்.

முட்டு-மட்டு=முடிவு, எல்லை, அளவு மட்டு-மட்டம். (மத்து)-(மத்தி)-மதி.

மதித்தல்=அளவிடுதல், உள்ளத்தால் அளவிடுதல், உயர்வாகக் கருதுதல், கருத்தாகக் கொள்ளுதல்.

மதிப்பு = ஏறத்தாழக் கணிப்பு (கணிசம்), உயர்வு.

மதி=மதிப்பு, அளவிடப்பட்ட பண்டம் (ஏற்றுமதி, இறக்குமதி), அளந்தறியும் பகுத்தறிவு.

அறிவுப்புலன். மதி - மதம் = கொள்கை, சமயம், நூற்கொள்கை. மதி என்னும் சொல் முன்னிலை படர்க்கை யசைநிலையாய் வருங்கால், அளவு என்னுங் கருத்தில் 'அது போதும்' என்றேனும், அறிவு என்னும் கருத்தில் ‘அது