உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திரவிடம் தென்சொல்லின் திரிபே

செருமன் : Treiben - பண்டை ஆங்கிலம் Drifen. ஆங்கிலம் : Drive,

துரத்தல் என்பது ஓட்டுதல்.

81

ஆகவே, வடமொழியார் கூறும் இரு பொருளும், திரவிடம் என்னும் சொல்லை வடசொல்லாகக் காட்ட இயலாமை காண்க.

இனி, ஒரு சில தமிழர், திரு + இடம் = திருவிடம் - திரவிடம் - திராவிடம் என வந்ததாகக் காட்டுவர். இவ்வரலாறு உத்திக்குப் பொருந்தாமையோடு சான்றும் அற்றது. ஒரு சார் இளம்புலவர், திரு + இடம் = திராவிடம் எனப் புணர்த்து,

அன்று வருகாலை

ஆவாகுதலும் செய்யுள் மருங்கின்

உரித்தென மொழிப”

என்னும் தொல்காப்பிய விதியையும்,

அது முன் வருமன்

றான்றாந் தூக்கின்

(258)

(180)

என்னும் நன்னூல் விதியையும் துணையாகக் காட்டுவர். அது + அன்று என்பது, அதன்று என்று புணர்ந்து செய்யுளில் அதோ அன்று என்று அளபெடுத்த நிலையையே மேற் காட்டிய விதிகள் குறிப்பதால், அவர் கூற்று சற்றும் பொருந்தாததென விடுக்க. மேலும், அவர் கருத்துப்படி, திரு + இடம் என்பது திரீடம் அல்லது திரீயிடம் என்றே புணர வேண்டும் என்க.

தெளிக.

இதுகாறும் கூறியவற்றால், திரவிடம் என்பது தென் சொல்லே யென்று

தமிழ் என்பது தூய்மையான தமிழையும், திரவிடம் என்பது தமிழினின்று திரிந்த தெலுங்கு, கன்னட முதலிய இனமொழிகளையும் இன்று குறிக்குமென்க. வடமொழியில் உயிர்மெய்ம் முதலை மெய்முதலாக்கி ரகரத்தை வழிச் செருகற்கு, படி - ப்ரதி, பவழம் – ப்ரவாளம் என்பன எடுத்துக் காட்டுகள். நன்றி : தென்றல் 19.9.1959