உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

மொழிநூற் கட்டுரைகள்

ழகரம் சில சொற்களில் ககரமாகத் திரியும்.

எ-டு : தொழுதி - தொகுதி. முழை - முகை.

இங்ஙனமே, நுழு, புழு, முழு முதலிய ழகர உயிர்மெய்யீற்றுச் சொற்களும் ககர வுயிர் மெய்யீற்றினவாய்த் திரிந்திருத்தல் வேண்டும்.

முள் முழு முகு, நுள் - நுழு - நுகு,

முள் - முளை. முளைத்தல் = தோன்றுதல்.

நுழுந்து – இளம்பாக்கு. நுழாய் = இளம்பாக்கு.

ஆயிரக்கணக்கான பழந் தென்சொற்கள் அழிந்து போயின்மையால், பல கருத்துகளை இணைக்கும் அண்டுகளை எல்லா மொழி முதல் அடிகட்கும் காட்டமுடிந்திலது.

(6) வடமொழியிற் பிற சொல்லிருத்தல் :

முகத்தைக் குறித்தற்கு ஆனனம், வதனம், முதலிய பிறசொற்கள் வடமொழியிலுள.

(7) தென்மொழியிற் பிற சொல்லின்மை :

தென்மொழியில் முகத்தைக் குறித்தற்குத் தொன்றுதொட்டு வழங்குவது முகம் என்னும் சொல் ஒன்றே.

(8) தென்சொல் வளம் :

இலை, தாள், தோகை, ஓலை என ஒரே, நிலைத்திணைச்சினையை நால்வகைப்படுத்தவும், வடு (மா), மூசு (பலா), கச்சல் (வாழை) என முக்கனிகட்கும் பிஞ்சுநிலையில் சிறப்புச்சொல் வழங்கவும் தெரிந்த மதிமான் பண்டைத் தமிழர்க்கு முகத்தைக் குறித்துச் சொல்லவில்லையென்பது, பகுத்தறிவுடையார்க்குக் கூறும் கூற்றன்று.

(9) வடமொழியில் தென்சொலுண்மை :

ஆயிரக்கணக்கான தென்சொற்கள் வடமொழியில் வெளிப்படையாய் வழங்கிவருவதால் வடமொழியில் தென்சொல்லைக் கடன் கொள்ளாதென்னும் பித்தர் கூற்றை எள்ளியிகழ்க.

(10) மேலையாரியத்தில் முகம் என்னும் சொல்லின்மை :

மேலையாரிய மொழிகளுள் ஒன்றிலேனும் முகம் என்னும் சொல் லின்மையால், முகம் என்பது தென்பாலி முகத்துத் தோன்றிய தென் சொல்லே யென ஓங்கி அறைக.

"பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே”

"மெய்யுடை யொருவன் சொலகாட்டாமையாற் பொய் போலும்மே பொய்போ லும்மே."