உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

கூட்டுச் சொல்:

இஞ்சிக் கிழங்கு பெ. பெ. ginger-root. இஞ்சித்தேறு, பெ. இஞ்சித்

ginger.

தமிழ் வளம்

பெ. இஞ்சித் துண்டு; small piece of green

இஞ்சிப்பாகு, பெ. இஞ்சி இளகிய (லேகிய) வகை; a kind of ginger electuary.

இஞ்சிப் பாவை, பெ. இஞ்சிக் கிழங்கு (மலைபடு. 125, உரை). ginger, as bearing the shape of a doll.

இஞ்சி யூறுகாய் = காயச் சரக்குச் சேர்த்து எண்ணெயில் ஊற வைத்த இஞ்சி, ginger-pickle

இஞ்சி வேர், பெ. இஞ்சிக் கிழங்கு ginger - root.

இஞ்சிச் 'சுரசம் என்பதை இஞ்சிக்கருக்கு என்றும், இஞ்சி முரப்பா' என்பதை இஞ்சி வடிப்பு என்றும், சொல்லலாம்.

மரபு வழக்கு : இஞ்சி தின்ற குரங்குபோற் பஞ்சரித்தல்(தொந்தரவு செய்தல்). தொடர்மொழி : இஞ்சி தின்ற குரங்கு.

உவமைப் பழமொழி : இஞ்சி தின்ற குரங்கு போல.

சொல்லமைவு

இஞ்சி (இரண்டிற்கும் பொது. 'இந்' வேர்; 'இஞ்சு' முதனிலை; வினை முதலீறு.

சொல் வரலாறு

இஞ்சி' : உல்

ஒல் ஒல்லுதல் = பொருந்துதல். உல் உறு. உறுதல் = பொருந்துதல். செறிதல், வலியுறுதல். உறு திண்ணம், வலிமை.

உர்

உறுதி

=

உர் -உரம் = வலிமை உறு - உற. உறத்தல் = செறிதல், இறுகுதல். "விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே" (தொல்-சொல்.348). உறந்த விஞ்சி = இறுகிய மதில்.

உல் உள் - அள் = செறிவு (திவா.), வன்மை (சூடா.)

அள்ளல்

=

=

நெருக்கம். அள்ளாகுதல் = செறிதல்.

அள்ளிருள் செறிந்த இருட்டு. அள்ளுதல் = செறிதல் (சீவக. 614). உள் இள் (இய்ஞ்சு) - இஞ்சு.

(இய்)

ஒ. நோ: குள் - (குய்)

- (குய்ஞ்சு) குஞ்சு.

புள் பிள் பிய் - (பிய்ஞ்சு) பிஞ்சு.

கொள் கொய். தொள் தொய். பொள் பொய்.

இஞ்சுதல் செறிதல், இறுகுதல், Fணிதல்.

இஞ்சு

=

இஞ்சி திணிந்த மதில் வகை.

பெரும்பாலும் செம்பு புனைந்தியற்றியதாகவும் சிறுபான்மை அரைத்த சாந்திட் டமைத்ததாகவும், பகைவரால் எளிதாகக் தாக்க