உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

தமிழ் வளம் என்னும் பண்டையிலக்கியப் பகுதிகளால் அறியப்படும். தமிழகத்தி லிருந்து பண்டை நாளிலும் மேனாடுகட்கு ஏற்றுமதியான சரக்குகளில் இஞ்சியும் ஒன்றாகும். அது வேராயிருப்பதால் இஞ்சி வேரென்றும், கிழங்காயிருப்பதால் இஞ்சிக் கிழங்கென்றும், பாவை போன்றிருப்பதால் இஞ்சிப்பாவை என்றும் சொல்லப்படும். இஞ்சிவேர் என்னும் சொல்லே மேனாடுகளிற் பல்வேறு வடிவில் வழக்குப் பெற்றது.

திருத்தம்

சமற்கிருத ஆரியர் இஞ்சி யென்னும் தென்சொல்லை ஆரியச் சொல்லாகக் காட்ட வேண்டி, ச்ருங்கவேர எனத்திரித்து மான்கொம்பு போன்றது எனப் பொருட் கரணியங் காட்டுவாராயினர். இது செயற்கை யானதும் பொருத்தமற்றதும் ஆகும் என்பதை, வரலாறு மட்டுமின்றிச் சொல்வடிவும் தெளியக்காட்டும். வடமொழியில் ச்ருங்க என்பது கொம்பு என்றுமட்டும் பொருள்படும். வேர என்பது உடம்பைக் குறிக்கும். இவ் விரண்டும் எங்ஙனம் இணைந்து இஞ்சியைக் குறிக்கும்? இற்றை யறிவியல்களைத் தெளிய வறிந்த மேனாட்டறிஞரும், சமற்கிருத ஆங்கில அகரமுதலியிலும், இருபதாம் நூற்றாண்டு அகரமுதலியிலும், ஆக்கசுப்போர்டுச்

சிற்றகரமுதலியிலும், திரவிடச் சொற்பிறப்பியல் அகரமுதலியிலும் சமற் கிருத ஆரியர் கூற்றையே தழுவியிருப்பது மிகமிக வியப்பிற்கிடமானதே. அவ் வகர முதலிகளுள்ளும், இருபதாம் நூற்றாண் டகரமுதலி இஞ்சி வேர் என்பதை மலையா (மலாய்)ச் சொல்லாகக் குறித்திருப்பது இன் னும் வியப்பானதே. இதற்குத் தமிழர் வெளிநாட்டினின்று வந்தேறிகள் என்று தவறாகக் தவறாகக் கருதியிருப்பதே அடிப்படையாகும். வடநாட்டுத் திரவிடமொழியாகிய பர்சியில் சிங்கிவேர என்று வழங்குவதால் மட்டும், அம் மொழி அதைப் பிற்காலத்து

அது

வடசொல்லாகிவிடாது.

வழக்கேற்றியிருக்கலாம்.

4. பதி

(1) சொல் :-பதி.

(2)

சொல்வகை (part of speech of word-class) செயப்படுபொருள்

வினை.

குன்றாவினையும் (எ. வ.) செயப்படு

பொருள் குன்றியவினையும் (எ. .ை).

(3) புடைபெயர்ச்சி (conjugation) : 8ஆவது வகை. பதிகிறேன் (நி. கா.) பதிந்தேன் (இ.கா.), பதிவேன், (எ. கா.).

(4) பொருளும் ஆட்சிமேற்கோளும் : (meanings and illus- trative quotations.)

செயற்பெயர் வடிவு : (gerunidial form)

=

பதி - தல் (செ. குன்றா வி.) 1. பதிவேட்டில் எழுதுதல், to register, enter in writing 2. பெயர்ப் பட்டியிற் சேர்த்தல், to take on the roll. (செ. குன்றிய வி.) 1. ஆழ்தல், to sink in, as the foot or a wheel in mud; to enter, penetrate, as into a soft body. வண்டிச் சக்கரம் சேற்றிற் பதிகிறது. (உலக வழக்கு). 2. தாழ்ந்திருத்தல், to be low-lying