உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

தமிழ் வளம்

ment, as in a budget. "இந்தக் கோவிலில் சங்கு ஊதுவதற்குப் பதிவு ஏற்பட வில்லை" (நாஞ். உ. வ.) 12. நிலைப்பு (நிலைவரம்), perma- nence. "இந்தவூரில் அவன் பதிவாயிருக்கிறான்" (உ. வ.) 13. வழக்கம், custom, habit. 14. அமைதி, submission, obedience, humility. "பதிவாய் நடந்துகொள் (உ.வ.) 15. விலைத்தணிவு. lowness of price (W.).

"

=

பதியம் 1. நாற்று முடியை இரண்டொரு நாட்குச் சேற்றில் பதித்து வைக்கை, temporary planting of a cluster or saplings in mud. 2. ஊன்றி நடுஞ் செடி கொடி கிளை முதலியன. slip, shoot, graft. 3. இலைப்பாசி, a of a species of duckweed. "செறியணிப் பதியத்திடை வளரிளஞ் சேல்கள்" (இரகு. நாட்டுப்.7).

பதியம் பதிகம் = "பதிகம் பரிக்குங் குழல்" (மறைசை. 17.) திரிசொற்கள் : (derivatives)

பதிவுகாரன்

=

பெ. வாடிக்கைக்காரன், க்கைக்காரன், customer.

பதி - பதம். பெ. 1. ஆழ வேரூன்றும் அறுகம்புல், bermuda grass (திவா.) 2. பதிவாக (பதுங்கி) இருந்து காக்குங் காவல், watch. (யாழ். அக.) 3. பதிவாக நகரில் திரிந்து ஆயும் மாறுகோலம், disguise (யாழ். அக.) 4. மீன் வரும்வரை பதிவாக நிற்கும் கொக்கு, crane (யாழ். அக.) 5, சூடு தணிந்த நிலை, coolness. 6. ஈரம், dampness, moisture. (திவா.) "மாவெலாம் பதம் புலர்ந்த" (கம்பரா. உயுத். மூலபல 79). 7. தண்ணீர் water (திவா.) 8. குளிர்ச்சியான கள், toddy, "மகிழ்ப் பதம் பன்னாட் கழிப்பி" (பொருந. 111). 9.(மதுவின்) இனிமை; Sweet- ness, gentleness. "வெங்குரு வரசர் பதம்பெற வெழுதி" (திருவாலவா 38:40) 10. இன்பம். joy, delight (சூடா.)

11. வன்மை, சூடு முதலியன தணிந்து உண்பதற்கும் நுகர்தற்கும் ஏற்ற நிலை (பக்குவம், வ.); proper consistency, required degree of hardness or softness, proper quality or fitness "சில்பத வுணவின்" (பெரும்பாண். 64). 12. (வெந்து உண்பதற்கேற்ற) சோறு (திவா.) 13. அவிழ், a grain of boiled rice (சூடா.) 14. உணவு cooked food (திவா.) "பதமிகுத்துத் துய்த்தல் வேண்டி டி (சிலப். 28:189) 15. பொருள், thing, substance, wealth. ஒ. நோ: கூழ் உணவு, பொருள், (யாழ். அக.) 16. (பதமான) மென்மை, softness. 17. இளம்புல், tender grass (பிங்) 18. ஏற்ற சமையம். fit occasion, opportunity, 'எண்பதத்தா லெய்தல் (குறள். 991).19. பொழுது, time (பிங்.) 20. நாழிகை, Indian hour of 24 minutes (திவா) 21. தகுதி, suitability. 22. அழகு, beauty (W) 23. (தகுந்த) அளவை, measure (சங். அக.) 24. (தகுந்த) முயற்சி, effort (யாழ். அக.) 25. (கத்தியின் தகுந்த நிலையான) கூர்மை, sharpness, as of the edge of a knife; கத்தி பதமாயிருக்கிறது. (உ.வ.) 26. (தகுந்த நிலையைக் காட்டும்) அடையாளம், sign, symptom, indication (சங்.அக.). (செ. குன்றாவி.) 1. பயன்படும்படி செய்தல், to make a thing fit for use. 2. பதப்படுத்துதல், to temper. 3. மெது வாக்குதல், to soften, "குளிர்ந்து நின்றுபதஞ் செயுநீர்" (சி. சி. 2 : 66).

பதஞ்செய்தல்

=