உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

தமிழ் வளம் என்னும் சொல்லைப் பாதம் என்னும் பொருளில் ஆண்டுவருகின்றனர். அடி வேறு; பாதம் வேறு. அடி என்பது ஒரு பொருளின் அடிப்பகுதி யையும் ஓர் உயிரியின் காலையும் பாதத்தையும் குறிக்கும் பொதுச் சொல். எ-டு: அடித்தட்டு, மயிலடி, திருவடி, அடிப் பகுதி யென்பது கீழ் இடத்தையும் கீழ்ப் பொருளையுங் குறிக்கும். எ-டு: பந்தலடி, தேரடி, சிறிய திருவடி பெரிய திருவடி. மரவடி என்பது கால்போன்ற அடிமரம். பாதம் என்பதோ நிலத்திற் பதியும் பரந்த அடியுறுப்பையே அல்லது பகுதியையே குறிக்கும் சிறப்புச் சொல். எ-டு: பாதத் தாமரை, பாதம் வைத்த விளக்கு. ஆகவே, பதிதல் என்பதை வேர்ப் பொருளாகக் கொண்ட பதம், பாதம் என்னும் இரு சொற்களும் தூய தென் சொல்லே யென்றும், அவையே முறையே பத, பாத என வடமொழியில் திரியும் என்றும் அறிக. இனி, பாதம் படுவதால் ஏற்படும் வழியைக் குறிக்கும் பாதை யென்னும் சொல், ஆங்கிலத்தில் (path என) இருப்பதையும் வடமொழியில் இன்மையையும், நோக்குக.

வஸ் (வசி),

என்னும் சமற்கிருத வினைச் சொற்கும். அதன் திரிவான 'was' என்னும் ஆங்கில இறந்த கால வினைச்சொற்கும், வதி என்னும்

தமிழ்ச்சொல் மூலமாயிருப்பதினின்று, தமிழின் தொன்மையையும் முன் மையையும் அறிக.

திருத்தம்:

பதம், பாதம், பதவி, பதனம் என்னும் தென்சொற்களின் திரிவான பத, பாத, பதவீ, பதன என்னும் வட சொற்களை, அவற்றின் மூலமான தென்சொற்கட்கே மூலமெனச் சென்னை யகரமுதலியிற் குறித்திருப்பது, மூல வழு என அறிக.

5.

பொறு

(1) சொல் : பொறு

(2)

(3)

(4)

சொல்வகை : (part of speech or word-class) வினை செயப்படு பொருள் குன்றா வினையும் (transitive verb) செயப்படுபொருள் குன்றிய வினையும் (intransitive verb). புடைபெயர்ச்சி : (congugation) - 15ஆவது வகை. பொறுக் கிறேன் (நி.கா.), பொறுத்தேன் (இ.கா.) பொறுப்பேன் (எ.கா.) பொருளும் ஆட்சி மேற்கோளும் (meanings and illustrative quotations)

செயற்பெயர் வடிவு

"

(Gerundial form)

7

பொறு-த்தல், (செ.குன்றா வி.) 1. சுமத்தல், to bear, sustain. "சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை" (குறள். 37). "இசையிலா யாக்கை பொறுத்த நிலம்" (குறள். 239), 2. தாங்குதல். to prop, to support, ஆலத்து... நெடுஞ் சினை வீழ்பொறுத்தாங்கு" (புறநா. 58). 3. அணிதல், to put on. "அம்மணி பொறுத்திரென் றறைந்தான்' (உபதேசகா. உருத்திராக். 44), 4. உடன் கொண் டிருத்தல், to continue, to possess, as one's own body. "பொறுக்கி லேனுடல் போக்கிடங்