உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போலிகை யுருப்படிகள்

51

காணேன்" (திருவாச. 23:6). 5. துன்பம் பொறுத்தல். to endure, suffer. 6. குற்றம் பொறுத்தல், to bear with to put up with. 7. இளக்காரங் கொடுத்தல், to indulge to allow. 8. மன்னித்தல், to excuse, forgive, pardon. "தம்மை யிகழ்வார்ப் பொறுத்தல் தலை" (குறள். 151). 9. பிற கருத்து வேறுபாட்டை அல்லது மத மத வேறுபாட்டைப் பொறுத்துக் கொள்ளுதல், to tolerate. 10. பொறுப்பு (உத்தரவாதம்) ஏற்றல், to take responsibility to be accountable for. 11. காலந் தாழ்த்தல், to delay, to postpone. 12. உவமையாகப் பெறுதல், to be similar. "உலகம் பொறுக்காத தோளாய்" (சீவக. 402). 13. அழுத்துதல், to press heavily, as a load.

(செ.குன்றிய வி.) 1. பொறுமையாயிருத்தல், to be patient, exer- cise forbearance. 2.வினையிடை நின்று கொள்ளுதல். to stop, wait halt in doing anything. 3.விலை கொள்ளுதல், to cost, as an article; to be spent or expended on. 4. தோணி தட்டிப்போதல், to run aground, as a vessel, to strand. 5. மாட்டிக்

கொள்ளுதல், to become fixed, jammed, wedged in (W.) 6. கடமையாகக் சுமருதல், to devolve upon, as a duty resposibility expenses. 7. இணங்கி யிருத்தல், to consent yield, comply with 8. மிகுந்திருத்தல், to be excessive. 9. கனத்தல், to be heavy, weight.

ஏவலொருமை (imperative singular) சற்றே பொறு, wait a little.

பெயரெச்சம் : (adjectival

participle)

(இ.கா.பெ.) இது அவனைப் பொறுத்த கருமம் (காரியம்), this is devolved on him. பொறுத்த குடும்பம், a large burdonsome family. பொறுத்த சுமை, load that presses heavily.

வினையெச்சம் : (Adverbial Participle)

இ.கா.வி. (past participle). இருநாள் பொறுத்துவா., come after two days. நி.கா.வி. (infinitive mood). அடிபொறுத்தாலும் வசவு பொறுக்க முடியாது. பொறுக்க உண்டுவிட்டாள். He has taken excessively. பொறுக்க மிதித்தல், tread hard, with pressure.

செயற்பெயரும் தொழிற்பெயரும் (gernud and verbal noun) "சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற்

அக.)

பெரியோ ரப்பிழை பொறுத்தலு வரிதே. "சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே" குற்றம் பொறுக்கை பெரியோர் இயல்பு.

(வெற்றி வேற்கை. 32)

(வெற்றிவேற்கை. 31)

தொழிற் பண்புப்பெயர் : (abstract noun).

பொறுப்பு, responsibility (உத்தரவாதம், வ.).

பொறுப்பாளி. a responsible person பொறுப்புக்காரன் (யாழ. பொறுப்புள்ள பதவி. a responsible post. பொறுப்புள்ளவன்.