உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் மொழியில் கலைச் சொல்லாக்கம்

15

விட்டனர். ஆகையினால் அந்தக் காலத்திலே உயர்ந்த நிலையில் தமிழர்கள் இருந்தார்கள். இப்போது இவற்றைப் பார்க்கும் பொழுது எந்த நிலையில் எப்படி நோக்க வேண்டும்? விசயநகரமும் சென்னையும் போலத்தான் நினைக்க வேண்டும். சமசுகிருத இலக்கியத் தையும் தமிழ் இலக்கியத்தையும் உற்று நோக்கும் பொழுது சென்னை நகரம் செம்படவன் குப்பமாக இருக்கும்போது விசய நகரம் இருந்தது. விசய நகரம் எவ்வளவு பெரிய நகரம் என்பது "இராபர்ட்சிவில்" எழுதிய 'பர்காட்டன்எம்பயர்' (Forgotton Empire) என்ற புத்தகத்தைப் படித்தால்தான் தெரியும். அந்த நகரம் இப்பொழுது தரைமட்டமாய்ப் பாழாய்க் கிடக்கிறது. இருந்தாலும், ஆங்காங்கு கிடக்கின்ற சில கற்களில், மண்டபங்கள் கல் துண்டுகளில், செய்யப்பட்டிருக்கின்ற சில ஓவிய வேலைப்பாட்டினாலே, நாம் உணர்ந்து கொள்ளலாம், எவ்வளவு சிறந்ததாக அந்த காலத்தில் இருந்ததென்று. அது போலத்தான் இப்பொழுதும் தமிழிலே சில சொற்கள் சிதறிக் கிடக்கின்றன. ஏரணம் என்பது (Logic) 'லாசிக்' அஃது இரு தனிச் செய்யுள்களில்தான் இருக்கின்றது. ‘ஏரணம் உருவமோடும் இசையோடும் கிருதஞ்சாலை' என்கின்ற தனிச் செய்யுளிலும் ஆரணங்கான் என்பர் அந்தணர்' என்ற தனிச்செய்யுளிலுள்ள இரண்டு தனிச் செய்யுட்களிலே நின்று, பழங்காலத்தில் ஏரணம் என்ற 'லாசிக்' இருந்தது என்பதை நமக்கு உணர்த்துகிறது. இப்படியே மற்ற நூல்களிலும் மற்றச் சொற்களைக் குறிப்பதற்கும் சொற்கள் ஆங்காங்கே இருக்கின்றன. இதை அறியும்பொழுது பழைய நிலையை நாம் அறிந்து கொள்ளல் வேண்டும்.

இந்தத் தமிழ் அழிந்து சிதைந்து கிடக்கிற, இந்தக் காலத்தில் கூட இருக்கிற சொற்களைக் கொண்டு எத்தனையோ வேறு சொற்களை நாம் ஆக்கிக் கொள்ள முடியும். அந்தத் தகுதி தமிழுக்கு இன்னும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் சிலர், உள்ளனர். சிலர் என்றால் புறம்பானவர்களைப் பற்றி யான் சொல்லவில்லை. அஃது அவர்களுக்கு இயல்பானது. சிலர் என்றால் காட்டிக் கொடுப்பதினாலேயே முன்னேறலாம் என்று கருது பவர்கள்; அதிலும் சில இளைஞர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மடமை என்ற சொல்லுக்கு இளமை என்பதே முதற் பொருள். அஞ்சல் மட அனமே என்பதில் மடம் என்பதற்கு இளமை என்று பொருள். மடமை என்பதற்கு அறிவின்மை என்பது தான்; ஏனென்றால் இளமையில் அதுதான் இருக்கும். சில இளைஞர்கள்கூட பேசத்தெரியா தவர்கள்கூட-கேள்வி கேட்கத் தெரியாதவர்கள்கூட-நம்மிடத்தில் ஏதோ பேசத் துணிகிறார்கள். நான் முப்பது ஆண்டு ஆராய்ச்சி செய்தவன். வரலாற்றோடு ஒட்டி ஆராய்ந்து இருக்கிறேன். தென்னாட்டைப் பற்றிய வரலாற்று நூல் அத்தனையும் படித்திருக்கிறேன். இதற்கு மேல் மாந்தர் நூல் என்னும் ஆந்திரோபாலசி (Anthropology) என்ற மிகச்சிறந்த நூலினையும்