உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் மொழியில் கலைச் சொல்லாக்கம்

17

உண்மைத் தமிழன் என்று சொன்னால் யாராயிருக்க வேண்டும். நான் தமிழன் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது. ஒருவன் தமிழிலே பேசுவது மட்டும் போதாது. அவன் முன்னோர் மொழியை இழந்திருப்பான். அவன் முன்னோர் மொழி பேச்சு வழக்கற்றிருக்கும். தமிழ் நாட்டிலிருந்தால் தமிழைத் தவிர வேறு மொழி பேச முடியாது; இல்லாமற் போனால் பிழைப்பு நடக்காது. ஆகையினால் பிழைப்புக்காகப் பேசுகிறான். எனவே தமிழ் என்று சொன்னால் தமிழுக்கு ஊறு செய்யாமல் ஆக்கவேலை செய்ய வேண்டும். தமிழ் வழிபாடாற்ற வேண்டும். தமிழிலே சடங்குகள் செய்ய வேண்டும். அப்படித் தானும் செய்வதில்லை; பிறரையும் செய்ய விடுவ தில்லை. ஆகவே இந்த வகையிலெல்லாம் நாம் நம்முடைய உரிமைகளை காத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இடைக்காலத்திலே, நாம் மிகத் தாழ்த்தப்பட்டு விட்டோம். அதாவது என்னவென்றால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்று சொன்னேனே அந்தக் குடுமி காலத்திலே தவறான கருத்து தமிழ் நாட்டிலே புகுத்தப்பட்டு விட்டன. அவை என்னவென்றால் சமற்கிருதம் தேவமொழி என்றும், அதுதான் இறைவனுக்கு ஏற்றதென்றும், விருப்பமானது என்றும், அதிலேதான் வழிபாடு நடத்த வேண்டும் என்றும் சொல்லித் தமிழ் வழிபாட்டிலிருந்து விலக்கப்பட்டது. அதுதான் அடிப்படைத் தமிழ் தாழ்த்தப்பட்டதற்கு அடையாளம். அந்தத் தமிழினுடைய தாழ்வு கடைசியில் தமிழரை தாழ்த்தி விட்டது. 'பிள்ளையாரைப் பிடித்த சனியன் அரசமரத்தைப் பிடித்தது' என்பது போல-அஃது அதனோடு தொடர்புடைய தனாலேயே அவனையும் தாக்கிவிட்டது. சென்னையிலே ஒரு முறை நானும் சுப்பையா அவர்களும் இருந்தபோது திருநெல்வேலியிலிருந்து 'நான் சைவ வேளாளன்' என்று தம்மைப் பெருமையாகச் சொல்லித் கொள்பவர் ஒருவர் வந்தார். சாப்பிட்டுவிட்டு வந்ததும் 'என்னய்யா. நன்றாக சாப்பிட்டீர்களா?' என்று கேட்டேன், 'சாதம் நன்றாக இருந்தது என்றார். 'சோறு என்று சொல்லுங்களேன்' என்றேன். சோறு என்று சொல்வதற்கு நான் என்ன, பள்ளு பறையா' என்றார். அப்போது நான் சொன்னேன். 'பள்ளு பறையன் சோறு உண்பதா; அப்படியானால் நீர் வேறு உண்ணும்' என்றேன். ஆகவே இப்படித் தமிழன் தன்னை தாழ்த்தி வைத்திருக்கிறான். இது ஒன்றே போதும் தமிழ் தாழ்த்தப்பட்டது, தமிழர் தாழ்த்தப்பட்டனர் என்பதற்கு, ஏதோ தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒரு சில வகுப்பாரைக் குறிக்கிறார்கள். அவர்களல்லர் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள். தமிழன் தாழ்த்தப்பட்டான்; தமிழரனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள். அவன் எங்கே? அவன் தொட்டதைத்தான் உண்பாரில்லையே. திருநெல்வேலியிலே சைவ வேளாளன் சொல்லிக் கொள்கிறான், நான் தமிழருள்ளேயே மிகத் தலைமையானவன் என்று; சரிதான் அவன் துப்புரவாகத் தானிருக்கிறான்;