உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

பாவாணர் உரைகள் இன்றுள்ள குமரிமுனைக்குத் தெற்கே இருந்த குமரியாறுவரை அமைந்த நிலப்பகுதி நீரில் மூழ்கிற்று. அதனால்தான் அந்த ஆற்றின் பெயர், எஞ்சிய நிலப்பரப்பின் இறுதிக்குப் பெயராக வழங்கி வருகின்றது.

இவ்வாறு தமிழகத்தின் பரப்பளவு குறைந்ததால்தான் புலவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறேன். குமரிமுதல் பனிமலைவரை, இந்தியா முழுவதும் உள்ள உறுப்பினர்களைக் கொண்ட, ஏதேனும் ஒரு துறை பற்றிய கழகம் அமைப்பதனால், அதில் எத்தனை உறுப்பினர் இருப்பர்? தமிழகத்தில் உள்ளவர்களை மட்டும் கொண்ட கழகத்தில் எத்தனைப்பேர் இருப்பர்?

தமிழகம் என்று சொல்லும்பொழுது எனக்கு வேறொரு செய்தி நினைவுக்கு வருகிறது. பழங்காலத்தில் சேரநாடு, சோழ நாடு, பாண்டியநாடு என்னும் மூன்றையும் கொண்டதே தமிழகம் எனப்பட்டது. ஆகவே, இன்றுள்ள தமிழ்நாடு தமிழகம் ஆகாது. இதனுடன் புதுவையும் சேர்ந்தாலே தமிழகம் ஆகும். ஆதலின், புதுவையைத் தமிழ்நாட்டுடன் இணைப் பதற்கும் தமிழர்கள் கிளர்ச்சி செய்தல் வேண்டும்.

இடைக்கழகம் அழிந்த காலத்தில்தான் ஆரியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். அவர்கள் இந்தியாவிற்கு வந்த காலம் கி. மு. 2000 முதல் கி. மு. 1200 வரை என்று சொல்லலாம். அவர்கள் தெற்கு நோக்கி - அஃதாவது தமிழகத்திற்கு வந்தது. கி. மு. 1200 ஆகும். அந்தக்காலம் முதலே அவர்கள் தமிழ் மக்களை எப்படியெல்லாம் வென்று அடிமைப்படுத்தலாம் என் றெண்ணிச் செயலாற்றி வந்துள்ளனர். தமிழரைத் தங்கள் வயப்படுத்த வேண்டுமென்றால், தமிழறிவு இன்றியமையாதது என்று எண்ணித் தமிழை விரும்பிப் பயின்றனர். அவர்கள் வந்த காலத்தில் தமிழகம் எல்லா வகையிலும் பொன்னாடாகத் திகழ்ந்தது. எனவே இந்த நாட்டுவளம் அவர்களை இங்கேயே நிலைத்திருக்கச் செய்துவிட்டது.

அவர்கள் வந்தபிறகுதான் கடைக்கழகம் அமைக்கப்பட்டது. இக்கழகத்தின் காலம் கி. மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 4ஆம் நூற்றாண்டு வரை ஆகும் எனச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னால் வரலாற்றுப் பேராசிரியராக இருந்த திரு. இராமச்சந்திர தீட்சதர் அவர்கள் கூறியுள்ளார்கள். ஒருவகையில் இது பொருந்துவதாகவே தோன்றுகின்றது. இந்தக் கடைக்கழகத்திற்கு முன், பாண்டியன் மதுரையில் தலைநகர் அமைப் பதற்கு முந்தியே இயற்றப்பட்டதுதான் தொல்காப்பியம். இதை இயற்றிய தொல்காப்பியரும் ஓர் ஆரியரே. இந்தக் கருத்தை முதன்முதல் நான்தான் வெளியிட்டேன். எனது “ஒப்பியன் மொழிநூல்”, -முதல் மடலம் முதற் புத்தகத்தில் இதைத் தெளிவுபடுத்தியுள்ளேன். இதனால் தமிழ்ப் பேராசிரியர்கள் சிலரின் வருத்தத்திற்கும் ஆளானேன். இவர்களில் திரு.