உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

பாவாணர் உரைகள்

நான் மாணவனாயிருந்த நாட்களில் சேக்சுபியரின் 37 நாடகங்களைப் படித்திருக்கிறேன். அவ்வாறே தொடர்ந்திருந்தால் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் மாணவனாகச் சேரும் வாய்ப்பிருந்தது. ஆனால் ஒருநாள், இனிமேல் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் கூடாதென்றும், ஆங்கிலப் பேச்சைக் கேட்கவும் கூடாதென்றும் உறுதி செய்து என்தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்டேன்.

ஆங்கிலத்திற்கு உருசியம் இணையாக வந்து கொண்டிருக்கிறது. அவ்விரு மொழிகளும் செல்வாக்குப் பெறுவதற்குக் கரணியம் அவை வழங்கும் நாடுகள் புதியனவற்றைக் கண்டுபிடிக்கும் நாடுகளாக இருப்பதே!

பல்கலைக் கழகங்களுக்கிடையே இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலம் நீங்கினால் இந்தி புகுந்து விடும். பின்னர்த் தொடர்பிராது. ஒரு பல்கலைக் கழகத்திலிருந்து பிறிதொன்றிற்கு மாறுவதும் இயலாது.

7000 இந்தியர் இன்று இங்கிலாந்தில் வாழ்கின்றனர். என் மாணவரும் அமெரிக்காவில் உள்ளனர்.

பழக்கம் வீணைப் பயிற்சிக்குத் தேவையானதுபோல் மொழிக்கும் தேவை. ஏனெனில் மொழியே ஒரு கலையாகும். அதனாற்றான் செந்தமிழும் நாப்பழக்கம் என்று கூறினர். டெமாசுதனிசு என்னும் கிரேக்க நாட்டுப் பெரும் பேச்சாளன் தொடக்கக்காலத்தில் குழறுவாயனாகவிருந்தவனே. தெலுங்கானா நிலைமை நம்முடையதை ஒத்ததன்று.

ஆரியம் இருந்தால்தான் தெலுங்கு வாழும்;

ஆரியம் ஒழிந்தால்தான் தமிழ் வாழும்.

அங்கு ஆண், பெண் அனைவரும் போராடுகின்றனர். இங்குத் தமிழர்களே எதிர்ப்பாளர்களாகத் தோன்றுவார்கள். உள்நாட்டுப் போருக்கு (Civil War) நாம் அணியமாக வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் பிரிய வாய்ப்பிருந்தது. அண்ணாத்துரையும் பெரியாரும் அகலக்கால் வைத்தனர். அப்போதே தமிழ்நாட்டுக்காகப் போராடும்படி கண்ணதாசன் நடத்திய ‘தென்றலில்' எழுதினேன். விடுதலைப் படையை விட்டுவிடுங்கள்.

குருதிக் கையொப்பமும் செம்மைக் கையொப்பமும் ஒன்றே!

திருநெல்வேலியில் 'சூழ்ச்சியம்' என்னும் சொல் வழக்கில் உள்ளது. 'Engine' என்னும் ஆங்கிலச்சொல்லிற்குச் சூழ்ச்சியம் என்பதே சரியான தமிழ்ச்சொல். 'பொறி' என்பது 'machine' ஐக் குறிக்கும், தட்டச்சுப் பொறி என்பது போல. எனவே 'Engineering College' என்பதைச் 'சூழ்ச்சிய வினைக் கல்லூரி' என்றும் 'Mechanical' என்பதைப் 'பொறி வினை' என்றும் வழங்க வேண்டும்.