உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் சொற்பொழிவு

47

அச்சூழ்ச்சிய வினைக் கல்லூரியில் சமற்கிருத வகுப்புக்களை நடத்த ஏற்பாடு செய்த முத்தையனை (இயக்குநர்) 'மாட்லாடு' என்னும் சொற்கு மூலம் கேட்டேன். அவர் அமைதியாயிருந்தார். இழந்த ஆற்றலைப் பெறவேண்டும். மொழியியல் தொடர்பான பயிற்சி நமக்கு மிகவும் தேவை. போராட்ட காலத்தில் பட்டிமன்றங்கள் நடைபெறும். புண்படாத போர் நிகழும்.

கிளைகள் தொகையைப் பொருளாளர்க்கு அனுப்பிவிடுங்கள். நமக்கு நல்ல பொருளாளர் கிடைத்துள்ளார். சிலை (திசம்பர்)த் திங்கள் 20, 21 ஆகிய இருநாளிலும் கழக முதலாட்டை நிறைவு விழாவும்,திருவள்ளுவர் ஈராயிரமாண்டை நிறைவு விழாவும் நடைபெறும். 'திருக்குறள் தமிழ் மரபுரை' அப்போது வெளியிடப் பெறும். கிளைகள் அல்லது மாவட்டம் ஒவ்வொன்றும் 200 உருபா தண்டி விடுக்க வேண்டும்.

(திரு. சாத்தையா இடையிட்டு முகவையில் விழாவை நடத்தவேண்டு மென்று கேட்டுக்கொள்கிறார்.)

சாத்தையா கேட்டுக் கொண்டபடி முகவையில் நடைபெறும். திருவள்ளுவர் படம் சப்பரத்தில் வைத்து எடுத்துவரப்பட வேண்டும். சையரங்கு அமைப்பு மாநாட்டில் நடைபெற்றது சரியில்லை. அது போதாது. நான் சில பாடல்களைக் கட்டி வைத்துள்ளேன்.

இசை பலவகைப்பட்டது. தியாகராசர் இசை தலைமையானது. கொடிவழியில் அது மூன்றாம் தலைமுறையது. உயர்ந்த மெட்டுக்கள் இசைவடிவில் இருத்தல் கூடாது. இசைப்பா வடிவில் வேண்டும்.

தண்டபாணி தேசிகர், கீழவெளியூர், சோமு மூவரையும் அந்த மாநாட்டில் பாடச் செய்ய வேண்டும். கருநாடக இசை என்பது தமிழிசை தான். ன். ஆரோகணம் அமரோகரணம் என்னும் சொற்களைத் தமிழில் ஆரோசை, அமரோசை (பெரிய புராணம்) என்று வழங்கவேண்டும். அடிப்படைச் சொற்கள் தமிழே.

12000 பண்கள் அக்காலத்தில் இருந்தன

300 பண்களையே இன்று பாட முடியும்.

இசை வளர்ச்சிக்கு அரசுதான் பணிசெய்ய வேண்டும். காலமெல்லாம் தி.மு.க. இருந்தால் தமிழ் கெடாது; ஆகுல் வளராது. பேராயம் இருந்தால் வாழ்வும் இல்லை. வளமும் இல்லை. பாலூட்டும் போதே பேராயக் கட்சியைத் தலையெடுக்க விடாமல் தடுக்கும் உணர்வையும் ஊட்ட வேண்டும்.

அகரமுதலி திருத்தப்பட்டாலொழிய வளர்ச்சியில்லை. 1982-இல் நிலைமாறலாம். 10000 பேரை உறுப்பினராகச் சேர்த்தால் மதிப்பிருக்கும்.