உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

பாவாணர் உரைகள் அங்கே தான் கண்ணன் இருந்தான். அவன் ஆயர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் தூய தமிழன். அங்குள்ள வழக்கத்தையெல்லாம் பார்த்தீர்களானால், கண்ணன் அக்கால் தென்னாட்டில் உள்ள வழக்கப்படியே நப்பின்னையை ஏறு தழுவி மணந்தான் என்று இருக்கின்றது. இவ் வழக்கம் நம் நாட்டின் முல்லை நிலத்தின் விழாவை யொட்டியது. ஒவ்வோர் ஆயர் குடும்பத்திலும் ஒரு சேங்கன்று பிறந்தவுடன் அதற்கு அக் குடும்பத்தில் உள்ள பெண்ணின் பெயரை வைத்து அதை வளர்த்து வருவார்கள். அந்தப் பெண்ணுடன் அந்தக் கன்றும் நன்கு வளர்ந்து காளையாகும். அந்தக் காளையை எவன் பிடித்து அடக்குகின்றானோ அவனே அந்தப் பெண்ணை மணப்பதற் குரியவன் என்று தீர்மானிப்பார்கள். இதெல்லாம் அக்காலத்தில் இருந்த ஒரு வழக்கம். அந்த முறைப்படி அந்தக் கண்ணனும் மணந்தான்.

இப்பொழுது, க்ருஷ்ண என்றால் கருப்பன் என்றுதான் பொருள். நீங்கள் அகர முதலியை எடுத்துப் பாருங்கள். அதிலே 'கருள்' என்ற தூயதமிழ்ச் சொல் இருக்கும். கருள் - என்றால் கருப்பு. இந்தக் 'கருள்' என்னுஞ் சொல்தான் வடமொழியில் 'க்ருஷ்' என்று திரியும். 'சுள்' என்று ரு சொல் உண்டு. 'சுள்' என்று வெயிலடிக்கின்றது என்று நாம் சொல்வ தில்லையா? சுள் என்றால் சுடுதல் என்னும் பொருள் குறிக்கும் ஒரு சொல் மூலம், காய்கிறது, சுடுகிறது என்பதையெல்லாம் இந்த 'சுள்' என்னும் சொல் உணர்த்தும். காய்ந்துபோன குச்சியைச் ‘சுள்ளி' என்று சொல்கிறோம். சுள் என்னும் மூலத்திலிருந்துதான் 'சுரம்' என்று வெப்பத்தைக் குறிக்கும் சொல் பிறக்கும். அதை வடமொழியில் ‘சுஷ்' என்று வைத்திருக்கிறார்கள். சுக்கு இருக்கின்றதே காய்ந்து போன இஞ்சி, அது காய்ந்து போனதால்தான் சுள்+கு சுக்கு என்று சொல்கிறோம். இந்தச் சுக்கைச் சமசுக்கிருதத்தில் 'சுஷ்க' என்று சொல்கிறார்கள். நம் 'சுள்'ளை அவர்கள் 'சுஷ்' என்று மாற்றி அதை அவர்களுடைய சொல் என்று வேறு சொல்கின்றார்கள். இன்னும் என்ன சொல்கிறார்கள், 'சுஷ்' என்பதைத்தான் நாம் 'சுக்கு' என்று மாற்றிக் கொண்டதாகவும் சொல்கின்றார்கள், ஏன் தெரியுமா? தமிழன் திறந்த வாயன்.

அப்படி அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுபோல் ஒன்று என்று எண்ணாதீர்கள் இதுபோல் எத்தனையோ எழுதிக்கொண்டு வருகின்றார்கள். அவற்றை யெல்லாம் இங்கு எடுத்துச் சொல்லிவிட முடி யாது. ஆனால் தமிழர்களில் எவரும் இது பற்றியெல்லாம் கவலைப்படுவ தில்லை; யாரும் கேட்பதும் இல்லை. அதனால் "பொய்யுடையொருவன் சொல்வன்மையினால் பொய்போலும்மே மெய்போலும்மே" என்றாகி வருகின்றது. இதையெல்லாம் ஏன் சொல்கின்றேன் என்றால், இப்படி 'அகிலம் முழுவதும் அந்தணர் மயம்' என்று சொல்கிறவர்தம் பெயரே எப்படி அமைந்திருக்கின்றது என்பதைத் தெரியாமல் இருக்கிறார். தூய சமசுக்கிருதச் சொல் என்று அவர் கருதிக் கொண்டிருக்கும் அவர் பெயரே