உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு

57

தூய தமிழ் மூலத்தைக் கொண்டிருக்கின்றது. அதே போல் ஸ்ரீ என்பது 'திரு' என்பதன் திரிபு. திரு என்பதற்குத் திரண்டது என்பது பொருள். திரட்சி - திரண்டது. திரண்டது என்பது முதன் முதலில் செல்வத்தைக் குறித்தது. திருவரங்கம் என்று வழங்கியதைத்தான் இப்பொழுது ஸ்ரீரங்கம் என்று மாற்றி வைத்திருக்கின்றார்கள். அடுத்து 'நிவாஸ்' என்பதையும் பார்த்தீர் களானால், அதில் உள்ள 'நி' என்பது ஒரு முன்னொட்டு (அஃதாவது Prefix என்கிற உபசர்க்கம்). 'வாஸ்' என்பது வஸ் என்பதினின்று வந்தது. வஸ்-to dwell. 'வஸ்' என்பது 'வதி' என்னும் தமிழ் மூலத்தின் திரிபு. வதிதல் என்றால் தங்குதல் அல்லது வாழ்தல். இனி, இந்த ‘வதி' என்னும் மூலத்தினின்று வேறு பல சொற்களை எடுத்து உருவாக்கிக் கொண்டார்கள். அவற்றிற்கும் மூலம் தமிழிலேயே உண்டு. எனவே இஃது ஒன்றைக் கொண்டே நம் கருத்தை நாட்ட வேண்டும் என்பதில்லை. எத்தனையோ ஆயிரக்கணக்கான சொற்கள் இருக்கின்றன. நான் இவற்றைக் கண்டு கொள்ள ஓராண்டு ஈராண்டு அன்று ஐம்பது ஆண்டுகள் ஆராய்ச்சியில் மூழ்கினேன். இவற்றுக்கு வேண்டிய சான்றுகளையெல்லாம் எல்லா நூல்களையும் படித்துத் தேடி எடுத்தேன்.

சொல்லி

ஓர் உண்மையை நிலைநாட்டுவதற்கு நான்கு வழிகளை முன்னோர்கள் வைத்திருக்கின்றார்கள். அவை நால்வகை அளவைகள் (பிரமாணங்கள்) எனப்படும். அவை காட்சி, கருத்து, ஒப்பு, உரை என்பவை. அவற்றைத்தான் அவர்கள் சமசுக்கிருதத்திலே பிரத்தி யட்சம், அநுமானம், உபமானம், ஆகமம் என்று பகுத்து வைத்திருக் கின்றார்கள். இப்பொழுது நமக்குக் காட்சி சான்று இல்லை. சிலர் கேட்கிறார்கள், தமிழ்நாடு குமரிநாடு என்பதற்கும் தமிழன் குமரி நாட்டான் என்பதற்கும் நமக்குக் காட்சி சான்று அஃதாவது பழம் பொருட்கலை Archaeological evidence நமக்கில்லையே என்று. அப்படி ஏன் இல்லை என்றால், நம்முடைய பழைய நிலமெல்லாம் கடலுள் மூழுகிப் போய் விட்டது. காவிரிப் பூம்பட்டினம் எப்படி மூழ்கிப் போய் விட்டதோ அப்படியே தெற்கே விருந்த அந்தக்குமரி நாடு, பழந்தமிழ் நாடெல்லாம் முழுகிப் போய் விட்டது. தெற்கே ஒரு பெரிய நிலம், அஃதாவது பனிமலை என்கின்ற இமயமலை எவ்வளவு தொலைவில் உள்ளதோ அவ்வளவு தொலைவில் குமரிமலை என்று ஒரு பெரியமலை தென்கோடியில் இருந்தது. அந்த இடத்தில்தான் நம் முன்னோர்கள் தோன்றினார்கள். அதனால்தான் அந்தக் காலத்திலேயே பாண்டியன் சிதம்பரம் என்று சொல்லப்பெறும் தில்லையை நடுவிடமாக வைத்துக் கணக்கிட்டான். நெஞ்சாங்குலையின் துடிப்புப் போன்றது இறைவனுடைய ஆற்றல். அந்த இறைவனுடைய தொழிலைத் தான் மூன்றாகவோ ஐந்தாகவோ சொல்லி, அதை நடம் என்று உருவகித்துச் சொல்கிறது. வடக்கே போனாலும் ஓர் ஈராயிரத்து ஐநூறு கல். தெற்கே போனாலும் ஓர் ஈராயிரத்து ஐநூறு கல். நடு இடம் அந்தத் தில்லை.