உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

6

ம்

பாவாணர் உரைகள் பாண்டியனே அந்த இடத்தை அப்பொழுதே அமர்த்திவிட்டான். இந்தச் சிவனடியார்களுக்கெல்லாம் சிறந்ததான உருத்திராட்சம் (உருத்திரா அட்சம் சிவனுடைய கண்மணி.) தொன்று தொட்டு விளைவது நேபாள நாட்டிலேதான். முதலில் மதுரையை நான் சொன்னேன். அதற்கு முன் தமிழர்கள் வங்கத்திலே தங்கி அங்கு ஒரு காளி கோயிலை உண்டாக் கினார்கள். அதனால்தான் அதற்குக் காளிக் கோட்டம் (Calcutta) என்று பெயர். இன்றைக்கும் வடமொழியிலே காளிக்கட் என்றுதான் சொல்வார்கள். ஆங்கிலத்தில்தான் கல்கத்தா என்று சொல்வார்கள். அதனால் வடநாட்டில் உள்ளதெல்லாம் ஆரியருடையது என்று தவறாக நாம் கருதிக்கொள்ளக் கூடாது. வடநாட்டிலே ஒரு காலத்திலே தமிழர்களாகவே இருந்தவர்கள் பின்னர் திரவிடர்களாக மாறினார்கள். நம் மனோன்மணியம் சுந்தரனாருக்குப் பின்னாலே பிராமணத்தொண்டர் ஒருவரே தோன்றினார் இந்தத் தமிழைக் காப்பதற்கு. அவர்தாம் பரிதிமாற்கலைஞர் என்னும் சூரியநாராயண சாத்திரியார். அவர் வரலாற்றை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அவருடன் நெருங்கிப் பழகியவர்களைக் கேட்டால்தாம் பல உண்மைகளெல்லாம் விளங்கும். சிறந்த தமிழ்ப்பற்றுள்ள உண்மையான தொண்டர். சிறந்த பண்பாடுள்ளவர். கிறித்துவக் கல்லூரியிலே தமிழ்ப் பேராசிரியராக விருந்த பொழுது, பிராமண மாணவர்களை வைத்துக் கொண்டு சொல்லியிருக் கின்றார், “பிராமணர் தமிழரை ஏமாற்றிவிட்டார்” என்று. எவ்வளவு துணிச்சலும் நெஞ்சுரமும் கள்ளங்கவடற்ற தன்மையுமிருந்தால் அவர் அவ்வாறு சொல்லியிருக்க வேண்டும் என்று கருதிப்பாருங்கள். அவர் தம் இறுதிக் காலத்தில் இருமல் நோயால் பேரிடரும் பெருந்துன்பமும் பட்டார். அப்பொழுதும் அவர் அன்பளிப்பாகவோ கட்டணமாகவோ காசு பணம் ஒன்றும் வாங்காமல் மாணவர்களுக்கு இலவசமாகத் தமிழைப் பாடஞ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் அடிக்கடி அவருக்கு இருமல் வருமாம். இவரோ இருமிக்கொண்டே பாடம் சொல்வாராம், "இருமல் என்னோடு பெருமல் செய்கிறதே” என்று.

நம் நாட்டிலே, பழைய காலத்திலே, இந்தியா முழுவதும் பெருவாரியாகப் பரவியிருந்தது, இக்கால் தென்னாட்டிலே சிறந்த சமயமாக விருக்கின்ற சிவநெறிதான். அந்த சிவ சமயத்திலே, பரிதிமாற் கலைஞர்க்குப் பிறகு தமிழில் சிறந்த புலவராகவும் ஆங்கிலத்திலே சிறந்த அறிஞராகவும் சிறந்த சிவநெறியாளராகவும் பண்பு மிக்கவராகவும் விளங்கிய பேரறிஞர் ஒருவர் தோன்றினார். அவர்தாம் தனித்தமிழ் உண்மையை நமக்கு விளக்கமாக அறிவித்தார். அவரே மறைமலையடிகள். அவர்களுக்குப் பின்னாலே நான் இந்தத் தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்து வருகின்றேன். இந்தப் பணிக்குக் கிறித்துவ சமயத்தைச் சேர்ந்த ஒருவனாகிய என்னை ஏன் இறைவன் தோற்றினான் என்றால், அந்த உண்மையை நீங்கள் அறிதல்