உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு

59

வேண்டும். மேனாட்டாருக்கு நம் குமரிநாட்டு வரலாற்றை அறிவதற்கு ஒரு பெருந்தடையாக விருப்பது இந்த (பைபிளில் சொல்லப்பெற்ற) ஏதேன் தோட்டக் கதை. ஏற்கனவே அந்த மதப்பற்றில்லாதவர்கள் கூட இனப்பற்று ஒன்றின் கரணியமாக நம்மைத் தாழ்வாகக் கருதுகிறார்கள். திரவிடரோடு அஃதாவது தமிழரோடு நாம் தொடர்பு கொள்வதாயிருந்தால் அது மிகவும் இழிவு என்று அந்த மேனாட்டார்களில் சிலர் கருதுகிறார்கள். சமசுக்கிருதம் என்றாலோ பிராமணர்கள் என்றாலோ, “அவர்கள் நம்முடைய இனத்தார்; நமக்கு இனமான ஒரு மொழியைப் பேசுகிறவர்கள்” என்று அவர்களுடன் தொடர்பு கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். அதைக் கூட ஒரு காலத்தில், அஃதாவது மாக்சுமில்லர் காலத்திலே, அவர்கள் அந்தக் கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் ஆரியர்கள் மேனாட்டார் களைத் தம் சொந்த இனத்தார் என்று கூறி அவர்களைச் சரிப்படுத்தி வைத்துக்கொண்டனர். இப்பொழுது சமசுக்கிருதம்தான் மேலை ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் மூலம் என்று அவர்கள் நன்றாக உறுதியாக நம்புகிறார்கள். நீங்கள் 1970ஆம் ண்டிலே வெளியான 'பிரித்தானிய கலைக்களஞ்சியம்' (Encyclopeadia Brittanica) என்கிற நூலை ஒருமுறை பாருங்கள். அதிலே அமெரிக்கப் பதிப்பைப் பார்த்தீர்களானால், இந்த இந்தியா படம் எங்கெங்கு வருகின்றதோ அங்கெல்லாம் கரியைப் பூசி வைத்திருக்கிறார்கள். "முகத்திலே கரியைப் பூசி விட்டான்” என்று நாம் கூடச் சொல்லுகின்றோமே அந்தச் சொற்படியும் பொருள்படியும் அது சரியாக விருக்கின்றது. அந்த Demigration என்பது அதிலே மிகப் பொருத்தம். வெபுசுடர் பேரகர முதலி (Webster Dictionary) என்று ஓர் அமெரிக்கப் பதிப்பு உளது. அதிலும் அப்படியே செய்திருக் கின்றனர். இந்தப் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் இருபத்து நான்கு மடலம். மூவாயிரம் உருபா. அதில் பிற்பகுதியிலே நிலப் படங்களை யெல்லாம் காட்டியிருக் கின்றனர். அவற்றில்தான் இந்தியப் பகுதியை மட்டும், அது பெரிய படமாக விருந்தாலும் சரி, சிறிய படமாக விருந்தாலுஞ் சரி முழுவதும் கரியைப் பூசி வைத்து விட்டார்கள். ஆனால் பாக்கித்தான் பகுதிகளை மட்டும் நன்றாக மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். இந்நிலை எதனாலே என்றால், இந்த எல்லைச் சச்சரவு (சச்சரவு என்பதைத் தகராறு என்று சொல்வோம்; அஃது உருதுச்சொல்; எனவே அதை விட்டுவிட வேண்டும்) ஏற்பட்டதே அப்பொழுது அவர்கள் பாக்கித்தானியர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்ள வேண்டுமே என்பதற்காக, அப்படிச் செய்ததாகத் தெரிகிறது. இது தவிர அதற்கு வேறு ஒரு கரணியம் இருப்பதாக உய்த்துணர முடியவில்லை. இப்படிச் செய்ததனால் இந்தியர் அனைவரை யுமே இழிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையை வைத்துப் பார்க்கும் பொழுது தமிழர்களைப்பற்றி அவர்கள் தாழ்வாக மதிக்கின்றார்கள் என்று சொன்னால் அதில் வியப்பதற்கு இடமில்லை.