உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




G

தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு

61

'உன்னுடைய பாட்டனுடைய பாட்டன் (அவனுக்கு ஓட்டன் அல்லாது சேயான் என்று பெயர். இந்தப் பகுதியில் ஓட்டன் என்று சொல்வார்கள்; திருநெல்வேலிப் பகுதியில் சேயான் என்ற சொல் வழக்கிலிருக்கின்றது. அதைப் படியாதவர்கள் ஜீயான் என்பார்கள். 'உங்கள் ஜீயான் காலத்திலே கூட இது இல்லையே' என்பார்கள். அவனையே எடுத்துக் கொள்வோம். அவனுக்கு முந்தினவனைக்கூட வேண்டாம்.) இருந்தானா? என்று கேட்டால், அவன் என்ன சொல்லுவான். 'இருந்தான்' என்பான். உடனே, ‘நீ அவனை கண்டாயா' என்று கேட்டால் என்ன சொல்லுவான். 'நான் காணவில்லை' என்பான். 'அப்படியானால் அவனை நீ காணாமலேயே அவன் இருந்தான் என்று எப்படிச் சொல்லலாம்' சொல்லலாமா? அப்படிச் சொல்லுகிறார்கள்.

இப்பொழுது நாம் ஒன்றை முடிவு செய்ய வேண்டுமானால் நமக்குப் பல சான்றுகள் இருக்க வேண்டுமே. அளவை நூலின் முதற்பகுதியிலேயே ஒரு விளக்கம் சொல்வார்கள். 'எல்லாமாந்தரும் இறப்பவரே. சாத்தன் ஒரு மாந்தன். எனவே அவனும் இறப்பவனே' என்று சொல்லுவார்கள். இப்படியில்லாமல் ‘எல்லா மாந்தரும் இறவாதவரே' என்று அடிப்படை யையே தவறாக வைத்துக் கொண்டால் முடிவும் தவறாகத்தான் வரும். “அப்படியானால் சாத்தன் ஒருமாந்தன்; சாத்தனும் இறவாதவனே” என்று முடிவு காண வேண்டியிருக்கும். மேனாட்டாருடைய ஆராய்ச்சி அப்படி யிருக்கின்றது. மேலை நாடுகளில் மிகப்பெரிய ஆராய்ச்சி யறிஞர்கள் இருக்கின்றார்கள். பரோ, எமனோ என்னும் இருவரைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பரோ என்பவர் இலண்டனில் இருக்கின்றார். எமனோ என்பவர் அமெரிக்காவில் இருக்கின்றார். இருவரும் பெரிய அறிஞர்கள். மொழிநூல் அறிஞர்கள்தாம். திரவிட மொழிகளையும் படித்திருக்கிறார்கள். ஆனால் தமிழரைப் போல தமிழை ஆழ ஆராய முடியாது. தமிழ் மிகமிகப் பழமையான மொழி.

இப்பொழுது மாந்தனுடைய வரலாற்றை எடுத்துக் கொண்டால், பகுத்தறிவுள்ள மாந்தன் தோன்றினானே அக்காலம் தமிழன் காலத்திலே தான் தொடங்குகின்றது. அவ்வளவு பழமையான காலம் தமிழர்களுடையது. பலர் இப்பொழுது தமிழில் உள்ள மிகப் பண்டைய நூலாகிய தொல் காப்பியத்தை ஆராய்ந்து அத்துடன் நின்று கொள்கின்றார்கள். தொல் காப்பியத்தின் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு. ஆனால் அதற்கு முந்திப் போக வேண்டும் மாந்தன் தோன்றிய காலத்திற்கு. கி.மு. நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போனால்தான் தமிழனுடைய தோற்றத்தை நாம் அறிய முடியும். அந்த அளவுக்குப் பழமையானது தமிழ்மொழி. அவர்களுக்கு (பரோ, எமனோவிற்கு) இந்த உண்மைகள் தெரியாது. அவர்களுக்கு எடுத்துச் சொல்வாரும் இல்லை. கால்டுவெல் சொன்னது உண்மைதான்; ஆனால் பிற்காலத்திலே அவர்கள் ஆரியத்திற்குச் சிறப்புக்