உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

பாவாணர் உரைகள் கொடுத்ததினாலும் ஆரியத்தை வைத்து அவர்கள் அடிப்படையாகக் காண முடியாமையினாலுந்தான் எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகள் என்னும் முடிவுக்கு வந்து விட்டார்கள்.

இப்பொழுது, இந்தக் காட்சியளவைக்கு – பழம்பொருள் கலைக்கு நமக்கு இடமே இல்லை. இக்கால் சில மண்டையோடுகளைக் கண்டெடுத்துக் கொண்டு சிலர், இதுதான் இக்காலம். அதுதான் அக்காலம் என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் எந்தக் காலத்திலும், ஒரு நாகரிக காலத்திலும் கூட முத்திறப்பட்ட ஆட்கள் இருந்தே தீருவார்கள். அவர்கள் தலையாயார், இடையாயார், கடையாயார் எனப்படுவர். இப்பொழுதுள்ள காலத்தை நாகரிகமில்லாத காலமென்று சொல்ல முடியுமா? ஆனால் இன்றும் இந்த ஆனைமலைப் பகுதிகளுக்கு நீங்கள் போனீர்களானால் அங்கு இன்னமும் நாகரிகத்தில் மிகக்குறைந்த காடர்கள் போன்ற மக்கள் இருக்கிறார்கள். ன்னும் அந்தமான் போன்ற தீவுகளில் இன்னும் நாகரிகமடையாத மக்களும் இருக்கிறார்கள். ஆனால் ஏதாவது ஒரு மண்டையோட்டைக் கண்டெடுத்தவுடனே இதுதான் நாகரிக மாந்தனுடையது அல்லது தமிழனுடையது என்கிற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது; வந்துவிட முடியாது. இப்பொழுது இசையை எடுத்துக் கொள்ளுங்கள். தோற் கருவிகளுக்குள்ளே மிகச் சிறந்தது மத்தளம் என்கின்ற மதங்கம். அஃது ஓர் உயர்ந்த இசையரங்கிலே அடிக்கப் பெறுகிறது. ஆனால் இன்னோர் அரங்கிலே ஒருவன் கஞ்சுரா அடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அது தோற்கருவிகளுக்குள்ளே தாழ்ந்த கருவி. இந்நிலையில் ஓர் அயல் நாட்டார் அந்தக் காஞ்சுரா அடிக்கின்ற அரங்கத்திற்குப் போய்க் கேட்டார் என்றால், அவர் 'இந்தக் காலத்திலே இவர்கள் இப்படிப்பட்ட கருவியைத் தான் வைத்திருக்கிறார்கள்' என்ற முடிவுக்குத்தான் வரமுடியும். அப்படித் தான் ஒவ்வொரு நாட்டிலும், துறையிலும் தாழ்ந்த நிலை, உயர்ந்தநிலை, இடைப்பட்டநிலை என்பனவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்.

தஞ்சையில் கடந்த சிலை 17 (31. 12. 72) அன்று நடந்த தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கில், பெரும் புலவர் நீ. கந்தசாமியார் அவர்களின் தலைமையில். மொழிநூல் முனைவர் ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் தொடர்ச்சி வருமாறு:

நீங்கள் சில வரலாற்று நூல்களைப் பார்ப்பீர்களானால், திரவிடன் என்று ஒரு காட்டு விலங்காண்டி (அஃதாவது மிருகாண்டி மிராண்டி; மிருகாண்டி என்பது வடசொல்) அல்லது தாழ்ந்த நாகரிகமுள்ள ஒரு சிற்றூர் வாணனைப் படம் பிடித்துக் காட்டியிருப்பார்கள். திரவிடன் என்று சொன்னால் உமாமகேசுவரனார், பவானந்தனார் போன்றோரைப் படம் பிடித்துக் காட்டியிருக்க வேண்டும். நம்முடைய முன்னோரெல்லாம் அவன்