உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு

63

காட்டிய தோற்றத்தினராய் இருக்கவில்லை. இவற்றையெல்லாம் கண்ணாரக் கண்டுங் கூட நாம் எதிர்க்காமலேயே இருக்கிறோம். அதனால்தான் நம் பகைவர்கள் மேலும் மேலும் தமிழையும் தமிழனையும் பழித்துக் கொண்டே இருக்கத் துணிந்திருக்கிறார்கள். வெளிநாட்டாரும் அவர்கள் கூறுவதை நம்புவதற்கு இடமுண்டாகி விடுகிறது. எனவே காட்சிப் பொருளளவைக்கு இடமில்லை. ஆகையினால் ஆங்காங்குக் கிடைக்கின்ற சில மண்டையோடுகளாலேயே நாம் அந்த முடிவுக்கு வந்து விடமுடியாது.

இப்பொழுது, ஐரோப்பாவின் வரலாற்றைப் பார்த்தீர்களானால், நண்ணிலக் கடற்கரை (Mediterranean Region) இருக்கின்றதே, அங்கேயுள்ள மக்களில் கிரேக்கர்களை எடுத்துக் கொள்ளுங்கள்; அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பொத்தகத்தில் உள்ள படங்களில் பாருங்கள் அவர்கள் சட்டையே அணிந்ததில்லை; கீழ்வேட்டியும் மேல் வேட்டியும் வெவ்வேறு வகையில் அணிந்திருக்கிறார்கள். இந்த நீள் மண்டையர் தாம் அங்கேயும் அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றார்கள். ஏனென்றால், இங்கிருந்து போனவர்கள் அவர்கள். மேனாட்டு வரலாற்றாசிரியர்கள் மிகப் பழைய நாகரிகமாக ஒரே காலத்தில் இரண்டு நாகரிகங்களைக் காட்டுகின்றார்கள்; எகிப்து ஒன்று; சுமேரிய நாகரிகம் ஒன்று சுமேரிய நாகரிகத்திற்குப் பிற்பட்டது தான் பாபிலோனிய நாகரிகம். இவற்றுள் இந்தச் சுமேரிய நாக ரிகத்திற்கு எழுத்துச் சான்று மிகுதியாயிருக்கிறதென்று காட்டுகின்றார்கள். அந் நாகரிகத்தை கி.மு. 3500 - இலிருந்து தொடங்குகிறார்கள். அதற்கடுத்தது பாபிலோனிய நாகரிகம். ஆனால் தமிழர் நாகரிகமோ மிக மிக முந்தியது. தலைக் கழகக் காலமெல்லாம் கி. மு. 10,000-க்கு முந்தியது. தமிழ்மொழி தோன்றியதோ அதற்கும் முந்தியது. இப்பொழுது எழுத்தைச் சார்பாகக் கொண்டு தமிழைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் பகைவர்கள்.

-

நீங்கள் இன்னொன்றை அறிந்து கொள்ள வேண்டும். இலக்கணத் திற்கு முந்தியது இலக்கியம். இலக்கியம் இருகூறானது எழுதப்பெற்ற லக்கியம்; எழுதப் பெறாத இலக்கியம். இவற்றுள் எழுதப் பெற்ற இலக்கியத்திற்கு முந்தியது எழுதப் பெறாத இலக்கியம். அதற்கு முந்தியது மொழி. மொழி வளர்ச்சியோ ஆறு ஏழு நிலைகளைக் கொண்டது. இந்த மொழி நிலைக்குப் பிற்பட்டதே எழுத்து. அந்த எழுத்து நிலையிலும் நான்கு வகைகள் சொல்லப் பெறுகின்றன. அந்த நான்கு வகைகளுள் சிறந்ததும் இறுதியுமான நிலையைத் தமிழ் தலைக்கழகக் காலத்திலேயே அடைந்து விட்டது. மேலே ஐரோப்பிய மொழிகளை நீங்கள் பார்ப்பீர்களானால் எந்த மொழியிலும் உயிர்மெய் எழுத்து இல்லவே இல்லை. அதில் உயிர்மெய் உயிர்முன்னும் மெய்பின்னும் என்றில்லாதபடி உயிரொடு மெய்யும் மெய்யோடு உயிரும் கலந்தே இருக்கும். எல்லாம் Alphabet என்று சொல்லிக் கொள்வார்கள்; அவ்வளவுதான். அல்ஃபா (Alpha) பீட்டா (Beta)