உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

G

பாவாணர் உரைகள்

"

கண்ட

என்று சொல்வார்கள் அல்ஃபா, பீட்டா என்று இரண்டு எழுத்துகள் முன்னாலே தோன்றியதாலே அவ்வாறு சொல்லிக் கொள்வார்கள். அஃது எதைப்போல் என்றால், நம்மவர்கள் ‘அ'னா ‘ஆ’வன்னா தெரியாதவன்' என்று சொல்வதைப்போல். அ, ஆ என்பதைப் போல் அவர்கள் அல்ஃபா (A) பீட்டா (B) என்பார்கள். ஆனால் தமிழ் எழுத்துகள் எப்படி என்றால் யிரும் மெய்யும் மட்டுமல்ல; உயிர்மெய்யும் தோன்றியது. அஃது ஏன் அவ்வாறு தோற்றினார்கள் என்றால், நம் பழைய இலக்கணவாசிரியர்கள் எல்லாரும் முற்றும் துறந்த முனிவர்கள்; சிறந்த மெய்யறிவுள்ள, கொண் முடிபுப் பேரறிஞர்கள். அஃதாவது 'தத்துவஞானிகள்'. அவர்கள் மூன்று வகையான பொருள்களை இவ்வுலகத்திலே கண்டார்கள். உயிர், உயிரில்லாத பொருள்கள், உயிரும் மெய்யும் கூடிய பொருள்கள். ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர்கள் ஈறாக உள்ள அனைத்தும் நிலைத்திணை முதல் மாந்தன் ஈறாக உள்ள அறுவகைப்பட்ட உயிர்மெய்கள். எனவே தாம் கண் எழுத்துகளுக்கும் உவமை முறையிலே உயிர் என்றும், மெய் என்றும், உயிர்மெய் என்றும் பெயர்களிட்டார்கள். தானே ஒலிப்பது உயிர்; உயிரின்றி இயங்காத எழுத்து மெய்; உடம்பு போன்றது; இரண்டும் கலந்தது உயிர்மெய். இந்த வகைகளைக் கூட முறையாக வைத்திருக்கின்றார்கள். முதன் முதல் ஓர் ஆளைப் பார்த்தவுடன் நமக்கு உயிர் தெரிவதில்லை. உடம்பு தான் விளங்கித் தெரியும். க என்று சொன்னால் க்+அ. இந்த உயிர்மெய் உண்மை எல்லா மொழிகளிலும் உண்டு. Cat (கேட்) என்று சி, ஏ, டி என்று பிரித்துச் சொன்னாலும் 'கேட்' என்று தானே (முதலில் 'க்'கைத்தானே) சொல்லல் வேண்டும். King என்பதை, K, I, N, G என்று பிரித்துச் சொன்னாலும் 'கிங்' என்று உயிர்மெய் முன்னால் வரும்படி தானே சொல்ல வேண்டும். க், ஐ, ங், கு-என்றா சொல்லிக் கொண்டிருக்கிறான்? K, I, சேர்ந்தாலே 'கி' என்றுதானே உயிர்மெய் வருகின்றது. ஆனால் அதை அவன் கண்டு பிடிக்கவில்லை. அந்த மெய்யும் உயிரும் சேர்ந்து ஒன்று போல் ஒலிக்கின்றது என்பதை அவன் பிரித்து உணரவில்லை. அவர்களைப் போலன்றி நம் முன்னோர்கள் சிறந்த மெய்ப் பொருள் அறிஞர்களாயிருந்ததாலே அதற்கு உயிர்மெய் என்று பெயரிட்டார்கள். இந்த உயிர்மெய் அமைப்பினாலே எழுத்துத் தொகை நீண்டு விடுகிறது. ஆகையினால் இதற்கு நெடுங்கணக்கு என்று பெயரிட்டார்கள். அந்த உயிரும் மெய்யும் மட்டும் பிரித்துச் சொல்வதைக் குறுங்கணக்கு என்றார்கள். மேலை மொழிகளில் இந்தப் பாகுபாடு இல்லவே இல்லை; நீங்கள் எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் சரி. இந்த முறை தமிழிலேதான் தோன்றியது. ஆனால் இப்பொழுது சொல்லப்படுவது என்ன? முதன் முதலில் இம் முறை சமற்கிருதத்தில்தான் தோன்றியது. சமற்கிருதத்தைப் பின் பற்றித் தமிழில் இதை வகுத்துக் கொண்டார்கள்' - என்று சொல்கிறார்கள்.