உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு

65

'உரத்தியும், எடுத்தும், கனைத்தும் க (K), க (G), கஹ (Kgh) என்னும் இம்மூவகை ஒலிகளையும் விட்டு விட்டுப் பொது வகையான ஒலிகளைத் தமிழர்கள் எடுத்துக் கொண்டார்கள்' என்று ஒரு தவறான கருத்தைச் சொல்கிறார்கள். கால்டுவெல்லே இந்தக் கருத்தைத் தோற்றுவித்து விட்டார். அஃது எதனாலே என்றால் இந்த வரலாறு தெரியாமையாலே! 'தமிழ் குமரி நாட்டில் தோன்றியது; அது மற்ற மொழிகளுக்கெல்லாம் முந்தியது; என்னும் உண்மையை அவர் அறியாததாலேயே! எனவேதான் இந்தக் குமரி நாட்டு உண்மையை அடிப்படையாக நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். இதற்குப் பின்னால் வேறு போராட்டங்கள் வரும். இந்த உண்மையை நாம் நன்றாக, அழுத்தந்திருத்தமாக, உறுதியாக உள்ளத்திலே கொள்ள வேண்டும். முதன் முதலாக இந்த நெடுங்கணக்கு தோன்றியது தமிழில்தான். அதற்குப் பின்பு திரவிட மொழிகளிலும், அதன்பின் வடநாட்டு மொழிகளிலும் தோன்றியது. இந்த முறையைத்தான் சமற்கிருதம் பின்பற்றியிருக்கிறது.

எழுத்து, மொழிக்குப் பிற்பட்டது. மிகப் பழைய காலத்திலேயே தமிழில் எழுத்து தோன்றி விட்டது. ஆனால் வடக்கே யிருந்து வந்த சமணர்கள் சிலரும் பௌத்தர்களும் அந்தக் காலத்திலே வடக்கே வழங்கிய பிராமி எழுத்தைத் தென்னாட்டிலே தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தார்கள். அவற்றில் கல்வெட்டுகள் மதுரையருகிலும் கிடைக்கின்றன. நம் தமிழ்ப் பகைவர்கள் இதையே சான்றாகக் கொண்டு, இதிலிருந்துதான் நம் தமிழ் எழுத்தே தோன்றியது, அஃதாவது அசோகர் காலத்திய பிராமி எழுத்து கி.மு. இரண்டாம் நூற்றாண்டில்தான் தமிழகத்தில் தோன்றியது; இதிலிருந்துதான் தமிழ் நெடுங்கணக்கு வகுக்கப் பெற்றது; தொல்காப்பியம் தோன்றியது அதற்குப் பிற்பட்டுத்தான் என்று, போன உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கிலே, ஐராவதம் மகாதேவன் என்னும் ஒருவர், தில்லியிலே இருப்பவர், எழுதி அச்சிட்டுப் படித்து விட்டுப் போய் விட்டார். ஆனால் அதற்கு எதிர்ப்பு ஒன்றும் இல்லை. அந்தக் கருத்தரங்கோ ஒரு சந்தைக் கூட்டம் போல் நடந்தது.

இந்த உலகத்தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கு உள்ளதே, அதைப் பற்றி ஒன்று உங்கட்குத் தெரிய வேண்டும். இது தனி நாயகம் என்ற வையா புரியின் வேலை; இவ்வளவும். மூன்று மாநாடுகள்! நடந்து விட்டன. பெரிய மாநாடுகள் உலகத் தமிழ் மாநாடுகள் கூட்டத்தினுடைய ஆரவாரத்தையும் மக்கள் தொகையையும் கண்டே பலரும் மயங்கி விடுகிறார்கள். ஆனால் ஒருவரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. இப்பொழுது ஒரு செய்தியைச் சால்கின்றேன். இப்படி நடந்தால் எப்படியிருக்கும் என்று நீங்கள் எண்ணிப்பாருங்கள்:

ஒரு பெரிய மாநாடு நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்; இங்கிலாந்திலே! அஃது உலகத்தமிழ் மாநாடு. அதற்குத் தலைமை