உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

பாவாணர் உரைகள் தாங்குகிறவர் இங்கிலாந்துப் பேரரசியார். அதற்குக் கொடியேற்றி வைக்கிறவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சன். அதைத் தொடங்கி வைக்கிறவர் கோசிசின் அல்லது குரோமிகோ போன்றவர். சீனக் குடியரசுத் தலைவர் சூ. என். இலாய் போன்றவர்கள் அதிலே பேச்சாளர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதைப் பார்க்கிறவர்கள் என்னவென்று நினைப்பார்கள். "அடேயப்பா, உலகம் முழுவதும் தமிழ் மாநாட்டை நடத்தத் தொடங்கி விட்டார்கள்." என்று ஆராய்ச்சியாளர்கள் கூடப் பெருமையாகத்தான் பேசுவார்கள். ஆனால் என்ன பயன் என்று நீங்கள் கருதிப் பார்க்க வேண்டாமா? இப்படி இவர்களெல்லாரும் சேர்ந்து ஒரு தமிழ் மாநாட்டை நடத்துவதென்றால் என்ன நடக்கும்? இப்படித்தான் இன்று நடக்கிறது.

இந்தத் தனிநாயகம் என்கிறவர் பிறர் முயற்சியாலே ஒரு பெயர் பெறுவதிலே ஒரு தனிநாயகம்! (சிரிப்பு!) அவருடைய வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியாது. அவர் முதலில் Tamil Culture என்ற ஓர் இதழைத் தொடங்கினார். அதில் தம்மைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் குறித்துக் கொண்டார். அதற்கப்புறம் ஈழத்திலே பல்கலைக் கழகத்திலே ஒரு பதவிக்குத் தாண்டினார். அங்கிருந்து மலையாவிலே ஒரு நல்ல வாய்ப்பு வந்து சேர்ந்தது. அங்கே பேராசிரியாக விருக்கிறார். முதல் முதலிலே அங்குத்தான் உலகத்தமிழ் மாநாடு. முதன் முதலில் தமிழ் நாட்டில்தான் நடப்பதா மலையாவில் நடப்பதா? அதோடுகூட, தமிழ் என்ன ஒரு வழக்கற்ற மொழியா? எந்த மொழியில் தமிழ் மாநாடு நடக்க வேண்டும்? ஆங்கில மொழியிலா நடப்பது? இப்படி ஆங்கிலத்துக்கென்று ஒரு மாநாடு நடப்பதானால் வேறு ஒரு மொழியிலா நடத்திக் கொண்டிருப்பார்கள்? மற்ற மொழிகளிலே வேண்டாம்; பிரஞ்சு மொழியில் நடத்துவதென்றாலும் அதற்கு இணங்குவார்களா? தமிழ் ஓர் உயிர் மொழி. அதற்கென்று ஒரு மாநாடு நடப்பதென்றால் தமிழிலன்றோ நடக்க வேண்டும். அதில் பேசுகிறவர்க ளெல்லாரும் தமிழில்தான் பேசுதல் வேண்டும். கட்டுரை படிப்பதென்றாலும் தமிழில்தான் எழுதிப் படித்தல் வேண்டும். பேசவோ எழுதவோ தெரியா விட்டால் பார்வையாளராகத்தான் வந்திருக்க வேண்டுமே தவிர, கருத்துக் கூற முடியாது. (கைதட்டல்). ஆனால் இந்த மாநாடுகள் அப்படியில்லை. எவரும் எந்த மொழியிலும் பேசலாம். அந்தக் கருத்தரங்கிற்கு ஒரு தலைவருமில்லை. ஒரு நடுவரும் இல்லை.

இங்குத் தமிழகத்தில் நடந்த உலகத் தமிழ்க் கருத்தரங்கில், காமில் சுவலபெல் என்னும் ஒருவர்; அவர் ஓர் ஆரிய வெறியர். அவர் என்ன படித்து விட்டுப் போனார் தெரியுமா? Introducing Tamil Literature என்னும் ஒரு சிறு சுவடி. ஆங்கிலத்திலே எழுதிப் பரப்பிவிட்டுப் போய் விட்டார். அதில் வரும் ஒரு பகுதியைச் சொல்லுகின்றேன். “மறைமலையடிகள்,