உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு

67

சோமசுந்திர பாரதியார், பாரதிதாசன் இந்த மூவரும் தமிழைக் கெடுத்தவர்கள்.” எப்படியிருக்கிறது பாருங்கள்! (சிரிப்பு) எவ்வளவு சிறந்த அழகிய உண்மை! அவர் ஆராய்ச்சியினாலே கண்டு பிடித்தது! (பெருஞ்சிரிப்பு) "இவர்களுடைய கொள்கையினாலே உலக அறிஞர் களுக்குள்ளே பிரிவினையும் பகைமையுந்தாம் உண்டாகும். இவர்கள் நூல்கள் நாளடைவில் தாமாக ஒழிந்து போம்" - இப்படி எழுதி வைத் திருக்கிறார்கள். இப்படிப்பட்ட இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு ஒரு மாநாடு நடத்தினால் எப்படியிருக்கும்? நீங்களெல்லாம் நன்றாக எண்ணிப்பாருங்கள்.

மறைமலையடிகள் தமிழுக்காகப் பட்டபாடு எவ்வளவு? அவர் தமிழில் மட்டுமல்லர், சமற்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் வல்லவர். அவருடைய ஆங்கில நடை எவ்வளவு பெரிய பட்டந்தாங்கி ஆங்கிலப் படிப்பாளிகளுக்கும் வரவே வராது. மிக அருமையாக எழுதுவார், ஆங்கிலத்திலே! அழகிய நடை; எழுத்தும் மிக அருமையாக விருக்கும். அவர்கள் இவ்வாறிருந்தும் அவரைப் பழித்துவிட்டுப் போயிருக்கிறார். பாரதிதாசன் ஏதோ தனிப்பட்ட ஒரு கொள்கையுடையவராக இருந்தும், தமிழுக்காக எவ்வளவோ பாடுபட்டார். சோமசுந்திர பாரதியாரைச் சொல்ல வேண்டுவதில்லை. இப்படிப்பட்டவர்களையெல்லாம் அவர்கள் பழித்து விட்டுப் போய் விட்டார்கள் அவர் (காமில் சுவலபெல்) தமிழை எப்படி ஆராய்ந்திருக்கிறார். எந்தெந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டார் என்றால், நற்றிணை என்ற தொகை நூலையும், சானகிராமன் என்பவர் எழுதிய நாலுவேலி நிலம் என்ற நாடகத்தையும் வைத்தே தமிழை ஆராய்ந்திருக்கிறார். அந்த நூல் தஞ்சையில் நடந்த ஒரு கதையை அடிப்படையாக வைத்து எழுதப் பெற்ற நூல். அதைப் போன்ற கடுங் கொச்சை நடையான ஒரு நூல் இருக்கவே முடியாது! சேரி மக்கள் பேசுவதைவிட மிகக் கடுமையான கொச்சை நடையை உடையது. அதை வைத்துக் கொண்டு தமிழை ஆராய்ந்துள்ளார். (சிரிப்பு) தமிழ் மொழியி னுடைய காலம் (தமிழ் தோன்றியதே) கி.மு. 1500 என்ற முடிவுக்கு வந்திருக் கிறார். இதைப் பார்த்த பின்னும் கேட்ட பின்னும் நம்முடைய பேராசிரியர்கள் எல்லாரும் அக்கருத்தை எதிர்க்காமல்தான் இருக்கிறார்கள். இப்படி, அதாவது இந்தியர்களிலேயே சிலரைக் கண்டாலும் நம் பேராசிரியர்கள் அஞ்சிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆங்கிலேயர் என்றாலோ மிகவும் அஞ்சுகிறார்கள்.

இப்பொழுது நம் சென்னை ஆளுநர் கூட என்னென்னவெல்லாமோ தமிழைப் பற்றிப் பேசுகிறார், ஆனால் அவர் கருத்தைக் கேட்கின்ற நம் புலவர்கள் ஒருவருக்கும் பேசுவதற்கு நா வருவதில்லை. அவர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு அப்படியே இருந்து விடுகின்றார்கள்.

-