உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு

69

பொத்தகம் எழுதினார். அதிலே அவர், மு. இராகவய்யங்கார் சொன்னதைத் துணைக் கொண்டு, அஃதாவது, 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப' என்று தொல்காப்பியத்திலே ஒரு நூற்பா இருக்கிறது; இதில் உள்ள ஐயர் என்ற சொல்லுக்குப் பிற்காலத்து வழக்கைத் துணையாகக்கொண்டு ஆரியர் என்று பொருள் கூறிவிட்டார். அவரும் (அஃதாவது நீலகண்ட சாத்திரியாரும்) அதை ஒப்புக்கொண்டு, 'தமிழர்கள் அக்காலத்தில் மணமுறையில்லாமல் விலங்குகள் போல் திரிந்தார்கள்; அவர்களுக்கெல்லாம் மணமுறையை ஏற்படுத்தி வைத்தவர்கள் ஆரியப் பிராமணர்கள் என்று எழுதி வைத்திருக்கிறார். பிறகு Historian Culture of the Tamils என்று ஒரு பொத்தகம் எழுதினார். அதிலே, கால்டுவெல், 'கொற்கையிலேதான் தமிழ் நாகரிகம் தோன்றியது; அக்காலத்திலே தமிழர்கள் நாகரிகத்தின் தொடக்க நிலையிலே இருந்தார்கள் என்று, எழுதி வைத்ததை அடிப்படையாகக் கொண்டு, இவரும் அப்படியே எழுதி வைத்து விட்டார். அக்காலத்தில் கால்டுவெல்லுக்கு வழிகாட்ட வல்ல தமிழ்ப் புலவர் ஒருவரும் இல்லை. ஆனால் நம் மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் 1908-லேயே 'India proper in the South' தென்னாடுதான் உண்மையான இந்தியா-என்றார் 'Indian Antiquary' என்ற ஓர் இதழிலே! அதற்குப் பின்னால் 1912-ல் இந்திய வரலாற்றை எழுதிய வின்சென்ட் சிமித் என்ற ஆங்கிலேயர் (அவர்தாம் இந்திய வரலாற்றை ஓரளவு சிறப்பாக எழுதியவர்) இந்தக் கருத்தைத்தழுவி, 'இந்தியாவின் வரலாற்றைத் தென்னாட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும்' என்று மிகத் தெளிவாக எழுதியுள்ளார். 'To find the basic element of Hindu Culture, by a study of Sanscrit and the history of Sanscrit in the upper India, is to begin the prob- lem and its the worst and most Cemplicated points' என்று சொல்கிறார். மேலும் அவர் “இந்நூல் வரலாற்றுக்குச் சிறந்த வழிகாட்டியாக விருக்கிறது. நான் அயல் நாட்டானாக விருக்கிறபடியால், இந்த நூல் கருத்தின்படி என்னால் வரலாற்றை எழுத முடியவில்லை. பின்னால் இந்திய வரலாற்றை விரிவாக எழுதப்போகும் ஒரு வரலாற்றாசிரியர் இந்த நூலைக் கடைப் பிடித்து, அந்நூலாசிரியர் கூறுகிறபடியே இந்திய வரலாற்றை எழுதுவாராக' என்று குறிப்பிடுகின்றார். ஆனால் நீலகண்ட சாத்திரியாரோ, வேண்டுமென்றே, “அவர் இப்படிச் சொல்லியுள்ளார்; இவர் அப்படிச் சொல்லியுள்ளார்” என்று தம் விருப்பம் போலவே எழுதி வருகிறார். அவர் எழுதியதாகச் சொன்னேனே History of South India-அந்த நூலில், 'தமிழர் ஆறு இனம் சேர்ந்த ஒரு கலவை இனம்' என்று சொல்லியிருக்கின்றார். நீக்ரோ இனம், ஆத்திரேலிய இனம், அர்மீனிய இனம், மங்கோலிய இனம், நடுக்கடற் பகுதியில் வாழ்ந்த ஒரு மக்களினம் முதலிய ஆறு கலவையினம் என்று சொல்லியிருக்கின்றார். இதையெல்லாம் படிக்கின்றபொழுது எப்படியிருக்