உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

பாவாணர் உரைகள் கின்றது தெரியுமா? இப்படிப்பட்ட நூல்களை இந்தக் காலத்திலே எழுதும்படியும் தமிழர்கள் விட்டுக் கொண்டிருக்கின்றார்களே என்று வருந்த வேண்டியுள்ளது. இந்த நிலைகள் வேண்டுமானால் எல்லாருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் படித்தவர்களுக்காகிலும் தெரிய வேண்டுமா, இல்லையா? இப்படிப்பட்ட நூல்கள் வந்து கொண்டுதாம் இருக்கின்றன. வாங்கப் பெற்றுப் படிக்கப் பெற்றும் வருகின்றன. இவற்றையும் படித்துக் கொண்டு 'எங்கெழிலென் ஞாயிறு எமக்கு' என்று கவலைப் படாமலுந்தாம் இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலைகள் தங்களையும் கெடுத்துக் கொள்வது மட்டுமன்று. தங்கள் முன்னோரையும் பழிக்கின்றதுமாகும். இப்படியிருந்தால் தமிழர் மாந்தர் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பயன் ஏற்படும்?

னால்

மாந்தனின் வளர்ச்சி வெறும் உடல் வளர்ச்சி மட்டுமில்லை. உள்ளு யிர் இருக்கின்றதே அதுதான் மாந்தன். அந்த அகக் கரண வளர்ச்சியடையா விட்டால் மாந்த நிலையை அடைய முடியாது. வெறும் உடம்பு மட்டும் வளர்வதாக வைத்துக் கொண்டால் அஃது அஃறிணை நிலை என்றுதான் நாம் சொல்லுதல் வேண்டும். அதனால்-தான் நாம் இதைப்பற்றியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கின்றது. பகுத்தறிவு, நெஞ்சுரம், தன்மானம் இந்த மூன்றும் இல்லை பலருக்கு அவற்றை ஆரியன் நன்றாகச் சுரண்டி எடுத்து விட்டான்; துளிக் கூட இல்லை. இதைப்பற்றி ஏதாவது நாம் சொன்னால், உண்மையிலேயே சினம் மூளவேண்டியதற்கு மாறாகச் சிரித்து மழுப்புகிறார்கள்.

இன்னொன்று, An advance history of India என்று ஒரு நூல் எழுதி வெளியிட்டிருக்கின்றார்கள். அந்த நீலகண்டசாத்திரியாரும். வி. என் சீனிவாசாச்சாரியார் என்பவரும் சேர்ந்து எழுதிய நூல் அது, அஃது ஓரளவு பெரிய நூல். இருபத்தைந்து உருபா விலை. அதிலேயும் தமிழர்களைத் தாழ்த்தியே எழுதி வைத்திருக்கின்றார். அவர்கள் தமிழரைப்பற்றிய வரலாற்றைத் தொடக்குவதெல்லாம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்துதான். மெகசுதனிசு என்ற நாடுகாணி முதன் முதல் பாடலிபுரத்திற்குப் போனானே (பாடலிபுரம் என்பது பாட்னா) அந்தக் காலத்திலிருந்துதான் இந்திய வரலாற்றையே தொடங்குகிறார்கள். இக்கால் புதியதாக ஒரு நூல் வந்திருக்கின்றது. சுப்பிரமணியம் என்னும் பேராசிரியர் ஒருவர் மதுரைப் பல்கலைக் கழகத்தில் இருப்பவர். அவர் தெ. பொ. மீயால் அமர்த்தப் பெற்றவர். (அவரும் இன்னொருவரும் தமிழ்ப் பேராசிரியர்களாகத் தெ. பொ. மீயால் அமர்த்தப் பெற்றனராம். அவர்கள் இருவரும் தங்களுக்குள் நான் பெரியவன், நீ சிறியவன் என்று திருமாலும் பிரமாவும் போரிட்டுக் கொண்டது போலப் போரிட்டுக்கொண்டு இருந்தார்களாம். அதன்பின் மு.வ. அங்குப் போய்ச் சேர்ந்த பின் இருவரையும் இரண்டு துறைகளுக்குப்