உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு

71

பேராசிரியராக்கி அமைதிப்படுத்தினாராம். நம் பேராசிரியர்கள் இப்படிப் பட்ட வகைகளில்தாம் போரிட்டுக் கொண்டிருக்கின்றார்களே தவிர, தம் மொழிக்கோ இனத்துக்கோ ஏற்படுத்துகின்ற இழிவுகளைக் கவனிப்ப தில்லை. பணத்தொகுப்பு, பதவி உயர்த்தம் முதலியவற்றில் இருக்கும் கருத்து இதிலெல்லாம் இருப்பதில்லை (அச்செய்தி இருக்கட்டும்). அந்த சுப்பிரமணியம் என்பவர் எழுதிய நூல் இது. (நூலைக் கையிலெடுத்துக் காட்டி) இதன் விலை முப்பத்தைந்து உருபா. இருப்பது முந்நூற்றைம்பது பக்கந்தான்! விலையோ அளவு கடந்தது. இவரும் இதில் என்ன செய் திருக்கிறார். திராவிடர் ஒரு கலவை இனத்தார்' என்று எழுதி வைத்திருக்கிறார். மேலும், “சிலர் சொல்லுகிறார்கள், திராவிடர்கள் தென்னாட்டில் தோன்றியவர்கள் என்று; ஆனால் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் மேனாட்டிலிருந்து வந்தவர்கள் போல் தெரிகிறது” என்று எழுதுகிறார்.

இரண்டு பிராமணர்கள், (இஃது ஓர் அரிய வாய்ப்பு. இறைவன் நமக்குக் கொடுத்த ஒரு பேறு என்றே நாம் நினைக்க வேண்டும் பெரிய வரலாற்றாசிரியர்கள்; நம் கருத்துக்குச் சார்பாக, நாம் சொல்லி எழுதினது போலவே எழுதி வைத்திருக்கிறார்கள், அந்த இருவர் யார் என்று சொன்னால் பி.டி. சீனிவாச அய்யங்கார் ஒருவர்; இராமச்சந்திர தீட்சிதர் என்பவர் ஒருவர். பி.டி. சீனிவாச அய்யங்கார் பல நூல்கள் எழுதினார் History of the Tamils என்பது ஒரு பெரிய நூல். அதிலே நன்றாக தெளிவாக விளக்கி யிருக்கிறார். “தமிழர் தென்னாட்டின் பழங்குடி மக்கள். அதோடு நாகரிக மாந்தன் தோன்றியது தென்னாடாகத்தான் இருக்க முடியும்" என்று சொல்லியிருக்கின்றார். ஏனென்றால், நாகரிக மாந்தன் வளர்ச்சிக் கேற்ற அந்த நால்வகை நிலங்கள்-குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பவை அடுத்தடுத்து இருக்கின்ற நிலம் இந்த உலகத்திலேயே தமிழ் நாடுதான்; வேறு எங்கும் இல்லை. ஒரே பாலை நிலமாக இருக்கும்; இல்லெனில் ஒரே காடு சூழ்ந்த முல்லை நிலமாக இருக்கும். இல்லெனில் குறிஞ்சியாக இருக்கும். இங்குப் போல் நான்கு நிலங்களும் அடுத்தடுத்து அமைந்த நிலப்பகுதியே உலகத்தில் இல்லை. முதன் முதல் குறிஞ்சி நிலத்தில்தான் மாந்தன் தோன்றியிருக்க வேண்டும். அங்கிருந்து அவன் முல்லைக்கு வந்திருக்க வேண்டும்; அதற்கடுத்தாற்போல் மருதம் இருக்கிறது அதற்கும் அடுத்தாற்போல் கடல். அது நெய்தல் ஆகி விடுகிறது. இப்பொழுது எண்ணிப் பார்த்தால், மேற்குத்தொடர்ச்சி மலையை அடுத்துக் காவிரி, முதலியவற்றையும், குமரிமலையையடுத்துக் குமரியாறு, பஃறுளியாறு முதலியவற்றையும், எடுத்துக் கொண்டால், அவற்றை அடுத்து அந்த நால்வகை நில அமைப்புகளும் உள்ளதை நாம் நன்றாக அறிந்து கொள்ளலாம். இவற்றையெல்லாம் விரிவாக எழுதி அந்தக் கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.

வையை

·