உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

பாவாணர் உரைகள்

அடுத்து, சிலர் சொல்லுகிறார்கள், இந்த மொகஞ்சதோரா நாகரிகத்தை ஒத்திருக்கிறது சுமேரிய நாகரிகம், என்று. அந்தக் கருத்தை மிகவும் நன்றாக விளக்கி இராமச்சந்திர தீட்சிதர் அவர்களும் எழுதியிருக்கிறார்கள். "இங்கிருந்து போன தமிழர்தாம் சுமேரிய நாகரிகத்தைப் பரப்பினார்கள்” என்பது அவர் கருத்து. பாபிலோனிய நாகரிகம், சுமேரிய நாகரிகம் என்பவையெல்லாம் பழைமையானவை என்று சொல்லுகிறார்களே, அங்கு ஊர் என்று ஒரு நகர் இருந்தது. அந்த ஊர் என்னும் பெயருடைய ஊரில் அகழ்ந்தெடுக்கப் பெற்ற ஒரு தேக்கு மரம் நம் சேரநாட்டிலிருந்து கொண்டு போனதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மேலும் பைபிள் என்னும் திருப்பொத்தகத்தில் சொல்லப் பெற்றிருக்கின்றவனும் யூதர்களுக்கு கு முந்தியவனும் ஆன ஆபிரகாம் என்பவன் பெயரில் உள்ள ஆப் என்னும் சொல்லுக்குத் தந்தை என்று பொருள். அந்த மொழியிலும் ஆப்-அப்பு என்னும் சொற்கள் தந்தையை அஃதாவது அப்பனைக் குறிக்கும். அப்பன் என்னும் சொல் தூய தமிழ்ச்சொல் என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மை இப்படியெல்லாம் இருக்கிறது.

இனிமேல் நாம் என்ன செய்ய வேண்டுமென்றால். வரலாற்றுத் துறை, கல்வெட்டுத் துறை, பழம் பொருட்கலைத் துறை இந்த மூன்று துறைகளிலும் துறைத் தலைவர்களாகவோ, ஆசிரியர்களாகவோ தன்மானமுள்ள தமிழர்தாம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு பொழுதும் தமிழும் வளராது; தமிழனும் முன்னேற மாட்டான். மதுரைப் பல்கலைக் கழகமாயினும் சரி; சென்னைப் பல்கலைக் கழகமாயினும் சரி. இப்படித்தான் இருக்க வேண்டும். இருக்கும்படி நாம் செய்ய வேண்டும். இனி இத்தகைய (சுப்பிரமணியம் போன்றவர்கள் எழுதிய நூல் போன்ற) வரலாற்று நூல்களையெல்லாம் வகுப்பில் பாடப் பொத்தகமாகப் படிக்கக் கூடாது. தமிழைப் பற்றியோ தமிழனைப்பற்றியோ வரலாற்றுப் பொத்தகத்தில் தவறாக எழுதியிருந்ததால் உடனே மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேறிவிட வேண்டும். சரியான வரலாறுகள் எழுதப் பெற்றால்தான் அவற்றை வகுப்பில் படிக்கவோ பாடஞ் சொல்லவோ விடலாம். இந்த நிலை ஏற்படுகின்ற வரையில், ஒருவேளை உண்மையான வரலாற்றைத் தெரிவிக்கும் நூல்கள் இன்னும் வெளிவரவில்லை யெனில், மாணவர்கள் பல மெய்யான வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பெடுத்துக் கொண்டாகிலும் கற்கலாம் கற்பிக்கலாமே!

இது நாள் வரையில் நாம் எத்தனையோ முறைகளில் உண்மைகளை எடுத்துச் சொன்னோம் எழுதியும் வருகிறோம். இனிமேல் நாம் ஒன்று சேரவேண்டும். அப்பொழுது உண்மையில் இதற்கென ஒரு போராட்டமே தொடங்க வேண்டியிருக்கும். அதற்கு ஒரு கால்கோளாகவே இக் கருத்தரங்கு கூட்டப் பெற்றது என்று எண்ணிக் கொள்ளுங்கள். இனி