உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

பாவாணர் உரைகள் எகர ஒகரம் இல்லை. ஏ, ஓ நெடில்கள் தாம் இருக்கின்றன. அப்படியே வேதமொழியிலும் ஏ, ஓ நெடில்கள்தாம் இருக்கின்றன. மேலும் வேதங்களில் நிரம்பவும் தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. அதற்குப் பின்னர் ஆரியர்கள் தங்கள் நிலையை மேம்படுத்துவதற்காகவும், வலுப்படுத்துதற்காகவும் ஓர் இலக்கிய மொழி வேண்டுமென்று தென்னாடு வந்து பழந்தமிழர்களுடன் பழகி அவர்கள் மொழியிலுள்ள சொற்களையெல்லாம் தங்கள் மொழியில் கலந்து கொண்டார்கள். அந்த வேதமொழியும் தமிழ் மொழியும் கலந்து செய்த ஓர் இலக்கியமொழி (Literary Language) தான் இந்தச் சமற்கிருதம் என்று சொல்லப் பெறும் மொழி. சம்ற்கிருத்-சம் என்றால் கூட என்று பொருள்; வேறொன்றுமில்லை. கூட- கலந்து செய்தது உன்பது. ப்ராகிருத் என்றால் முந்திச் செய்யப்பட்டது என்று பொருள். இந்த வரலாற்றை இப்பொழுது தலை கீழாக மாற்றிச் சொல்கிறார்கள்.

இப்பொழுது வட்டம் என்று தமிழில் இருந்தால் அது வட்ட என்று பிராகிருதத்தில் இருக்கும் சமற்கிருத்திலே விருத்த என்று திரியும். அது இன்னும் Verdo என்றிருக்கும் இலத்தீனிலே இப்படிப் பார்த்தால் தமிழின் முன்மை நன்கு தெரியும். சமற்கிருதமானது ஓர் அரைச் செயற்கை இயற்கைமொழி. (Semi artificial Literary dialect) அதை இப்பொழுது, என்றோ பெருமளவில் வழங்கி வந்தமொழி போலவும், உயிர்மொழி போலவும் சொல்லிக் கொள்வார்கள். அதோடு, அந்த வேத மொழியைக் கூட Vdeic Sanscrit என்று சொல்லுகிறார்கள். அது (Pro-chronism) முற்காலப்படுத்தம் என்னும் முற்றத்திற்கு வழுவுக்கு இடந்தருவது. அந்தக் காலத்தில் முற்றத்திற்கு-வழுவுக்கு அம்மொழி இல்லவே இல்லை. சமற்கிருதம் ஆரிய மொழிகளுக்கெல்லாம் மிக முந்தியது என்று வேறு தவறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இஃதெல்லாம் 'என் பாட்டன் திருமணத்திற்கு நான்தான் பாட்டு கட்டினேன்' என்று சொல்வது போலாகும். (நெடுஞ்சிரிப்பு). ஆகவே, காலமுறைப்படி நாம் ஆராய்ந்து பார்த்தால் சமற்கிருதம் இறந்தது மில்லை; பிறந்தது மில்லை. சிலர் அதை இறந்தமொழி என்று சொல்லுகின்றார்கள். அவர்களோ அஃது இறக்க வில்லை; இன்னும் உயிரோடு இருக்கின்றது என்று சொல்லி வருகிறார்கள் அது பிறந்தாலன்றோ இறப்பதற்கு? மொழிக்கு உயிர் என்று சொன்னால் அது வழங்க வேண்டும். மக்கள் ஒரு கூட்டத்தார் அதைக் கல்லாமலேயே இயல்பாக அதைப் பேசி வர வேண்டும். அப்படி எவன் பேசுகிறான்? சும்மா, ஏதோ காட்டு மாடத்திலே ஓட்டாண்டிகள் கூடினது போல, சமற்கிருதப் பண்டிதர்கள் சிலர் சேர்ந்து அதைப் பேசி வருவதால் அது உயிருள்ள மொழியாகப் போய்விடுமா? அதும் உயிருள்ள மொழியென்றால். எல்லாமொழிகளும், உலகத்தில் வழக்கற்றுப் போன மொழிகளெல்லாம் கூட இப்பொழுது பேசப் படத்தான் செய்கின்றன. இலத்தீன் பேசுகிறார்கள்; கிரீக்கு பேசுகிறார்கள். எசுப்ப ரெண்டோ, நோயல்,