தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
97
தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
97
களும் காவிய நாடகங்களும் வியாகரணங்களும் நிகண்டுகளும் சாத்திரங் களும் பிறவும் எழுந்தன.
இங்ஙனமிருக்கவும், தொல்காப்பியமே முதல் தமிழ்நூலென்றும், அதுவும் பாணினீயத்தைத் தழுவியதென்றும் முதன்முதலாக "நளியிரு முந்நீர் நாவா யோட்டி”ச் (புறம். 66 சுற்றுக் கடலோடியாய்த் (circumna vigator) திகழ்ந்து வடவை (Aurora Borealis) கண்ட தமிழனைக் கி.மு. 4ஆம் GI வ நூற்றாண்டுவரை வடஇந்தியாவும் அறியாதவன் என்று, இறப்ப இழித்துக் கூறுவது இளஞ்சிறாரும் எள்ளி நகையாடத்தக்கதே.
குறிப்பு: மூலத் தமிழ் நாடக நூலினின்று மொழிபெயர்க்கப்பட்ட காசுமீர வடமொழிப் பரத சாத்திரம், மறிநிழலீடாக மீண்டும் மூல மொழி யான தமிழில் மொழிபெயர்க்கப்பட விருக்கின்றது. இதைக் கண்டு அல்லது கேட்டு மூல மொழிபற்றி மயங்கற்க.
"நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்தன என்று அடியார்க்குநல்லார் தம் உரைப் பாயிரத்தில், உரைத்திருப்பதால், வடமொழி மொழிபெயர்ப்பின் மூலத் தமிழ்ப் பரதம் அழிக்கப்பட்டதென உய்த்துணர்க. இது என் ‘முத்தமிழ்' என்னும் நூலில் விரிவாக விளக்கப்படும்.
கூற்று: அசோகனும் தமிழ்நாடும்
“சந்திரகுப்தன் காலத்தில், விதப்பாக அசோகன் காலத்தே, (வடவர் தென்னவர்) தொடர்பு நெருங்கியிருந்தது. அசோகன் கட்டளை வாசகங்கள் பிரமகிரிவரை தெற்கிற் காணப்படுகின்றன. அவன் விடுசெய்திகள் தமிழரசர்
அனைவர்க்கும் விடப்பட்டுள. அவரொடு தொடர்பு நெருங்கியதாகி யிருத்தல் வேண்டும். அசோகன் சேரர், சோழர், பாண்டியர், சத்தியபுத்திரர் அல்லது அதிகமானர் என்னும் தமிழ்நாட்டரசர் நால்வரைப் பற்றிக் கூறுகின்றான். அவருள் முதல் மூவரே அரசரென்றும், அதிகமானர் சேரரொடு உறவுகொள்ள முயன்ற சிற்றரசரே யென்றும், தமிழ் மரபுவழிச் செய்தி கூறுகின்றது. சங்கக் காலத்திலும் தொல்காப்பியத்திலும் இந் நிலை மையே காண்கின்றோம். அதிகமானர் வல்லமையுள்ளவராயிருந்து ஏனை மூவரசரொடும் அரசியல் தலைமைக்குப் போட்டியிட்ட காலம் ஒன்று, அதற்கு முன் இருந்திருத்தல் வேண்டும். அது அசோகன் கட்டளை வாசகங்கள் உருவான காலமாயிருந்திருத்தல் வேண்டும். தமிழ் எழுத்து முறை அனைத்திந்திய எழுத்துமுறையின் தழுவிய அமைப்பே யென்றும், அதைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் என்றும், இன்னொரு கட்டுரையிற் சொல்லாடப்பட்டுள்ளது. அசோகன் விடுசெய்தி பொதுமகன் உள்ளத்தைக் கவர்ந்ததனால், அவனுக்கு எழுத்தறிவின்மீது வேட்கை வளர்ந்தது. அது அனைத்திந்திய வெழுத்தைத் தழுவித் தமிழெழுத்தை யமைத்தற்கு அகத் தூண்டுகோலாயிற்று அல்லது அதை விரைவுபடுத்திற்று. இது அங்ஙன