உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

(2) கலவைநடைப் பேச்சு

செந்தமிழ்ச் சிறப்பு

இற்றைத் தமிழிற் கலந்துள்ள அயன்மொழிச் சொற்களெல்லாம் ஒவ்வொரு சொல்லாகத் தமிழிற் புகுந்தவை அல்லது புகுத்தப்பட்டவையே. அவை புகுத்தப்படுமுன் அவற்றால் இன்று வழக்கு வீழ்த்தப்பட்டுள்ள தூய தமிழ்ச்சொற்களெல்லாம் எல்லார்க்கும் எளிதாய்ப் பொருள் விளக்கினவே. அவற்றின் இடத்தில் இன்று எளிதுணர் பொருட்சொற்கள் போல் வழங்கும் அயற்சொற்களும் தொடக்கத்தில் அரிதுணர் பொருட்சொற்களா யிருந்தனவே. ஆதலால், எளிய வழக்குச் சொற்களை நீக்கிவிட்டு அரிய வழக்கற்ற சொற்களைப் புகுத்துதல் கூடாதென்று கூறுவார், அறிவாராய்ச்சி யில்லாதவரும் தமிழ்ப் பகைவருமே யாவர். ஒருநாளுக்கு ஓர் அயற் சொல்லை விலக்கினாலும் ஓரீராண்டிற்குள் ஒருவர் தனித்தமிழ் பேசப் பயின்றுகொள்ளலாம். ஒவ்வொருவரும் நூற்றிற்கு நூறு தூய்மையாகப் பேசாவிடினும் இயன்றவரை பேசினாற் போதும்!

(3) வழுநடைப் பேச்சு

இனி, தூய தமிழையும் இலக்கணப் பிழையின்றித் திருந்திய வடிவிற் பேசுவதே கற்றோர்க் கழகாம்.

66

66

“கல்விக் கழகு கசடற மொழிதல்,” என்றார் அதிவீரராமபாண்டியர். பண்டைக் காலத்திற் குமரிநாட்டிற் பொதுமக்களும் திருத்தமாய்ப் பேசி வந்தனர். இன்று புலமக்களும் பிழையின்றிப் பேசுவதில்லை. கொச்சைத் தமிழை விரும்பும் காமில் சுவலெபில் என்னும் செக்கோசிலாவக்கியத் தமிழறிஞரும் தம் 'தமிழ் வரலாற்றிலக்கணச் சொற்பொழிவுகள்' (Lectures on Historical Grammar of Tamil) என்னும் ஆங்கிலச் சுவடியில், 'எழுத்திற்கும் முறைப்பட்ட பேச்சிற்கும் பயன்படுத்தப்பெறும் இலக்கிய நடைத் தமிழை, தமிழ்நாட்டுத் தலைசிறந்த கல்வியாளரும் வழக்கமான உரையாட்டில் ஒருபோதும் கையாள்வதில்லை. பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் தம் மனைவியாரொடு அல்லது மக்களொடு பேசும் போது ‘சொல்கிறேன்' என்று சொல்வதில்லை, 'சொல்ரேன்' என்றே சொல் கிறார். தமிழ் எழுத்தாளர் ஒருவர் தம் நண்பரொடு பேசும்போது, 'இல்லா விட்டால்' என்ற வடிவத்தையன்று, 'இல்லாட்ட' என்ற வடிவத்தையே பயன்படுத்துகின்றார்.” (பக். 5-6) என்று இற்றைத் தமிழ்ப் பேராசிரியரையும் எழுத்தாளரையும் பழித்திருக்கின்றார். வழுநடையைப் போன்றே இலக்கண நடையும் வழக்கமாயின் எளிதாவதே. சில சொற்களின் வழுவடிவம் உண்மையில் திருந்திய வடிவத்தினும் பலுக்கல் (உச்சரிப்பு) அரிதா யிருக்கும். ஆயினும், வழக்கங் கரணியமாக எளிதாக வாய்க்கு வரும். எடுத்துக்காட்டாக, தஞ்சை வட்டாரத்தில் எண்பது என்னும் சொல்லின் எம்பளது என்னும் திருந்தா வடிவம் எளிதாக வழங்குதல் காண்க.

2