உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போலித் தமிழ்ப் பற்று

97

(4) சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலித் திருத்தம் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி, வேண்டுமென்றே தமிழ் சமற்கிருதத்தின் கிளை என்று அயலார் கருதுமாறு, தமிழ்ப் பகைவரான பிராமணத் தமிழ்ப் புலவரால், ஆதி வையாபுரியாரைத் துணைக்கொண்டு திட்டமிட்டுத் தொகுக்கப்பட்டுள்ளது.

இதில், அக்கை, அச்சன், அச்சு, அப்பம், ஆப்பம், அம் (ஆம், அம்பு) அம்பலம், அரக்கு, அரங்கு (அரங்கம்), அரசு (அரசன்), அரத்தம், அவை (அவையம்) ஆசிரியன் (ஆசிரியம்) ஆணி, ஆயிரம், இலக்கணம், இலக்கியம், உவணம் (சுவணம்), உவமை, உரு (உருவு, உருபு, உருவம்), உலகு (உலகம்), ஐயன் முதலிய ஆயிரக்கணக்கான அடிப்படைத் தமிழ்ச் சொற்கள் ஆரியச் சொற்களாகக் காட்டப்பட்டுள்ளன. பேரா. பரோ, பேரா. எமனோ ஆகிய மேனாட்டுப் பேராசிரியர் இதை அடிப்படையாகக் கொண்டதினாலேயே, தம் திரவிட ஒப்பியல் அகரமுதலியையும் குன்றக் கூறலாகவும் வழுப்படவுந் தொகுத்துள்ளனர். இந்தி தமிழ்நாட்டிற் புகுவதற்கும் கடந்த ஈருலகத் தமிழ் மாநாடுகளும் தமிழ்ப் பழிப்பு மாநாடுகளாக முடிந்தமைக்கும், சென்னைப் ப.க.க.த. அகரமுதலியே கரணியம். இதைத் திருத்துமாறு தி.மு.க. அரசிற்கு எத்துணையோ தமிழ்ப் பேராசிரியரும் தமிழ் மன்றங்களும் எத்துணையோ முறை வேண்டியும், அஃது இம்மியும் பொருட்படுத்தவில்லை.

சென்னைப் ப.க.க.த. அகரமுதலித் திருத்தத்தினும் தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாதது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பு. இதுபற்றிப் பர். (Dr) மெ. அழகனார் (சுந்தரம்) தி.மு.க. ஆட்சி ஏற்றவுட னேயே அறிஞர் அண்ணாதுரையிடம் எத்துணையோ எடுத்துச் சொல்லியும், அவர் செவிசாய்த்திலர்.

(5) கடந்த 2ஆம் உலகத் தமிழ்மாநாடு தமிழ்நாட்டுத் தலைநகரில், மறைமலையடிகள் வாழ்ந்த இடத்தில், நடந்தும் கோலாலம்பூர் மாநாட்டைவிடக் கேடாக முடிந்தது. மறைமலையடிகள் வழியினர் விலக்கப்பட்டனர். வங்கநாட்டுப் பிராமணர் மொழித்துறைத் தலைவ ராயினர். தில்லியில் நடுவணாட்சித் துறையைச் சேர்ந்த பிராமணரொருவர், தமிழெழுத்தும் தொல்காப்பியமும் அசோகன் கல்வெட்டிற்குப் பின் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் தோன்றினவென அச்சிட்ட கட்டுரை படித்தார். பிரெஞ்சுக்கார ரொருவர், பண்டைக்காலத்தில் சமற்கிருதமே இந்தியப் பொதுமொழியா யிருந்ததென்றும், அதன்வழி வந்ததே தமிழென்றும், கட்டுரை படித்தார். திரு. காமில் சுவெலபிலார் மறைமலையடிகளையும் நாவலர் சோமசுந்தர பாரதியையும் புரட்சிப்பாவலர் பாரதிதாசனையும் மொழித்துறைப் பண்பாடற்றவராக வன்மையாகக் கண்டித்த கட்டுரை யொன்றை அச்சிட்டு வழங்கினார். தமிழ்நாட்டு முப் பல்கலைக்கழகத்