உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

செந்தமிழ்ச் சிறப்பு தலைமைத் தமிழ்ப் பேராசிரியரும் இதைத் தடுக்கவில்லை. தமிழரசும் கண்டிக்கவில்லை. மாநாடு பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நடை பெற்றது.

(6) தமிழ்நாட்டு அரசினர் பேரியங்கிப் போக்குவரத்துத்துறை வண்டிகளிலும் அலுவலகங்களிலும், தமிழ்க் கூட்டுச் சொற்களும் தொடர்களும் புணர்ச்சிப் பிழையாக எழுதப்பட்டுள.

(7) கல்லூரிகளிற் கற்பிக்கப்படும் அறிவியல் துறைப் பாடங்கட்குரிய குறியீடுகள் முற்றும் தனித்தமிழில் மொழிபெயர்க்கப்பட வில்லை.

(8) வழக்கற்று வரும் தமிழ்ச்சொற்களைத் தொகுக்கவும், இசை நாடகம் கணியம் மருத்துவம் முதலிய துறைக்குறியீடுகளை ஆரியர் வருமுன் னிருந்ததுபோல் தூய தமிழாக்கவும், கோயில் வழிபாட்டைத் தமிழில் நடைபெறுவிக்கவும், இன்னும் ஒரு முயற்சியும் செய்யப்பெற வில்லை. ஆயினும், தமிழ் அரியணை யேறிவிட்டதாகச் சொல்லப்படு கின்றது.

(9) தனித்தமிழ் ஆராய்ச்சி நூல்கட்கும் தமிழ் வரலாற்று நூற்கும் தனித்தமிழ் ஏடுகட்கும் அரசியலுதவி ஒருசிறிது மில்லை.

(10) மறைமலையடிகளார் வழியினர் தமிழ்த்தொண்டு செய்ய ஆவலாகக் காத்திருந்தும் அவர் புறக்கணிக்கப்பட்டு, அவர் இருக்க வேண்டிய இடத்திற்கு அரைகுறையான தகுதியுடையவரே அமர்த்தப்படு கின்றனர்.

(11) தமிழின் பெயரால் அரசியற்கட்சி வளர்க்கப்படுகின்றதே யொழிய, தமிழ் வளர்ச்சிக்கான தகுந்த வழி ஏதும் கையாளப்பெறவில்லை.

இவற்றையெல்லாங் கவனியாது இந்தியெதிர்ப்புக் கூட்டங்கள் நடத்துவதும் திருவள்ளுவர் ஈராயிர ஆண்டுவிழாப் பற்றி அறிக்கை விடுவதும், வணிக வளர்ச்சியும் பெயர் விளம்பரமும் நோக்கியனவே யன்றி வேறல்ல. அயன்மொழிப் பெயரை மாற்றாது தமிழ்ப்பற்றுக் காட்டுவ தெல்லாம், பெற்றோர்க்கு ஓரளவு உதவினும் அவரைப் பிறரிடத்து மற்றோராகக் காட்டி மறைப்பது போன்றதே.

“தென்மொழி" கும்பம் 1969