உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




15

மதுரைத் தமிழ்க் கழகம்

தமிழ்மொழியும் இலக்கியமும் நாகரிகமும் பண்பாடும் வரலாறும் போற்றுதல் பற்றி, தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு ம.கோ. இராமச்சந்திரனார் இதுவரை செய்துள்ள ஏற்பாடுகளுள், வருகின்ற புத்தாண்டு வாழ்த்துப்போல் சனுவரித் தொடக்கத்தில், பாடல்மிக்க கூடலுற்ற மாட மதுரையில், பனிமலை யெழுச்சியும் குமரிமலை முழுக்கும் கண்ணெதிரில் நிகழ்ந்தாற்போல் காட்டவிருக்கும் திரைப்படப் பிடிப்பும்,

66

"சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவா னுயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழ்

என்று மாணிக்கவாசகர் பாடிய தமிழ் வளர்க்குங் கழகம் ஒன்று நிறுவும் திட்டமும், உலகம் பாராட்டுமளவு தலைசிறந்தனவாகும்.

இவற்றுள், கனவுபோல் தோன்றி மறையும் திரைப்படத்தினும், நனவாக நிலைத்து நின்று நாட்டிற்கு நலம் பயக்கும் கழக நிறுவனம் சாலச் சிறந்த தென்பதைச் சொல்ல வேண்டுவதில்லை.

ஒரே கழகம்

பண்டைத் தமிழகம் சேர சோழ பாண்டியம் என்னும் மூவேந்தக மாகப் பிரிந்து, குமரிமலைமுதற் பனிமலை வரை பரவியிருந்ததேனும், பாண்டியம் என்னும் ஒரே நாட்டில், ஒவ்வொரு காலத்திலும் ஒரே கழகம் இருந்து வந்தது. தமிழுலகெங்கணுமுள்ள தலைமைப் புலவரெல்லாம் அதிற் கலந்திருந்தனர்.

தலையிடை கடையென முக்கழகம் இருந்ததாகச் சொல்லப்படினும், பாண்டிநாட்டிலேயே பாண்டியரே கழகம் நிறுவி வந்ததால், உண்மையில் அம் மூன்றும் ஒன்றே. கடல்கோளாற் பாண்டியராட்சி இடையீடுபட்ட தினாலேயே, மூவேறிடத்தில் மூவேறு காலத்தில் கழகம் நிறுவ நேர்ந்தது. இரு கடல்கோளும் நிகழ்ந்திராவிடின், தலைக்கழகம் என்னும் ஒன்றே இறுதிவரை தொடர்ந்திருந்திருக்கும்.

பழம் பாண்டிநாடாகிய குமரிநாடு, தமிழ் தோன்றிய நிலமாதலாலும், அயன்மொழி வாடை இம்மியும் வீசாத செந்தமிழ் நாடாதலாலும், பாண்டியர்க்குத் தாய்மொழிப் பற்றுத் ததும்பி வழிந்ததனாலும், தமிழ்மகளே