உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

செந்தமிழ்ச் சிறப்பு வேண்டும் என்றும், எழுதி வெளியிட்டார். இந்திய வரலாற்றுத் தந்தையெனத் தகும் வின்சென்று சிமிதும், தம் 'முந்துகால இந்தியா' (Early India) என்னும் வரலாற்றுப் பொத்தகத்தில், சுந்தரம் பிள்ளையின் கூற்றைப் பாராட்டி, எதிர்கால இந்திய வரலாற்று ஆசிரியரெல்லாரும் தம் வரலாற்று நூலைத் தெற்கினின்றே தொடங்க வேண்டுமென்று வலுவுறச் சார்ந்துரைத்தார்.

அக் கொள்கையைத் தழுவி, பி.தி.சீநிவாசையங்கார் 'இந்தியக் கற்காலம்' (Stone Age In India), ‘ஆரியர்க்கு முன்னைத் தமிழ்க் கலை நாகரிகம்' (Pre-Aryan Tamil Culture), 'தமிழர் வரலாறு' (History of the Tamils) முதலிய நூல்களையும்; வி.ரா. இராமச்சந்திர தீட்சிதர் ‘தமிழர் தோற்றமும் பரவலும்' (Origin and Spread of the Tamils), 'வரலாற்றிற்கு முன்னைத் தென்னிந்தியா' (Pre-Historic South India) முதலிய நூல்களையும், எவரும் மறுக்க முடியாதவாறு திறம்பட எழுதிப் போயினர்.

ஆ யின், அவர் மறைந்தபின், பேரா. கே. நீலகண்ட சாத்திரியார் அவர் கொள்கைக்குங் கூற்றிற்கும் நேர்மாறாக, ஆரிய வேதத்தையே அடிப்படை யாகக் கொண்டு இந்திய வரலாற்றை வடக்கினின்று தொடங்கி, உண்மைக் கும் உத்திக்கும் ஒவ்வாவாறு பேரன் பாட்டனைப் பெற்றான் என்பதுபோல், தமிழர் வரலாற்றைத் தலைகீழாக வரைந்துள்ளார்.

தமிழன் பிறந்தகம் தெற்கில் முழுகிப் போன குமரிநாடென்னும் அடிப்படையிலேயே, தமிழின் சிறப்பையும் தமிழன் உயர்வையும், உண்மையாக உணர்தலொண்ணும்.

வரலாற்றிற்கு முன்னைத் தென்னிந்தியா' என்னும் வரலாற்றுப் பொத்தகம் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாயிருந்தும், அதைப் படியாமையாலோ, தம் இயற்கையான அடிமைத்தனத்தாலோ, வையாபுரித் தன்மையாலோ, தலைமைப் பதவித் தமிழ்ப் பேராசிரியரும் பேராசிரியர் நீலகண்ட சாத்திரியாரை எதிர்க்கத் துணிவதில்லை. அதனால், தமிழின் தொன்மையும், முன்மையும், தாய்மையும், தலைமையும் தமிழ்நாட்டிலும் ஒப்புக்கொள்ளப்படாமலே யிருக்கின்றன.

ஒரு மொழியின் சிறப்பை எடுத்துக்காட்ட, அகரமுதலிபோற் சிறந்தது வேறொன்றுமில்லை. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகரமுதலி (Lexicon) 23 ஆண்டுகளாகப் பொதுமக்கள் பணத்தில் நாலரையிலக்கம் உரூபா செலவிட்டுத் தொகுக்கப்பட்டது. ஆயின், மூல (ஆதி) வையா புரியாரைத் துணைக்கொண்டு தமிழ்ப் பகைவரான பிராமணத் தமிழ்ப் புலவரே அதைத் தொகுத்ததனால், தமிழ் ஒரு புன்சிறு புதுக்கலவை மொழியெனக் காட்டப்பட்டுள்ளது. அவ் வகரமுதலியின் குற்றங்குறைகளை யெல்லாந் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியும், தன்னலப் பிண்டங் களான தலைமைத் தமிழ்ப் பேராசிரியருட் சிலரும் அதைப் புறக்கணியாது போற்றி வருகின்றனர்.