உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

செந்தமிழ்ச் சிறப்பு

பேச்சின்மையால் ஒலிவடிவாய் மட்டும் மகிழ்ச்சியைக் காட்ட முடியும். ஒருவனது இசை கருத்தோடு கூடியிருப்பின், அஃது உணர்ச்சியுள்ளதும் உண்மையானதும் உயர்ந்ததுமாயிருக்கும். ஒருவரது கருத்து, தாய் மொழியிற் போல வேறெம் மொழியிலும் சிறக்க வெளிப்படாது; அறியாத மொழி யாயின் வெளிப்படுத்தவே முடியாது. மனிதனின் சிறந்த பேறுகளில் ஒன்றானதும் அவனை உயர்திணைப்படுத்துவதும் மொழியாம். அதை அவன் பயன்படுத்தாவிடின் கடைப்பட்ட அறிவிலியும் அஃறிணையு மாகின்றான். இசை ஒருவரது உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்த தாதலின், அதைக் கடவுள் வழிபாட்டிற்கும் ஊடல் தீர்ப்பிற்கும் தொன்று தொட்டுப் பயன்படுத்தி வருகின்றனர். விளங்காத மொழியில் கடவுளை வேண்டின் அஃது உளறுவது போல்வதோடு கடவுளைப் பகடிசெய்து பழிப்பதுமாகின்றது. இசையினால் பாடுவார்க்கு மட்டுமன்றிக் கேட்பார்க்கும் இன்பம் விளைகின்றது. விளங்கும் மொழியில் பாடினால்தான் கேட்பார்க் கும் இன்பம் விளையும். பருந்தும் நிழலும் போலப் பொருளும் பண்ணும் பொருந்தியிருக்கும் உயர்ந்த இசையைப் பண்பட்ட தமிழன்தான் நுகர முடியும்; அயலார் நுகர முடியாது. ஆகையால், அவர் அதைக் குறை கூறுவது பொருந்தாது. மேனாட்டிசைக்கு அராகம் (ஆளத்தி), தாளம், சுரம் பாடல் என்ற மூன்றுமில்லை; மெட்டுகள்தா முண்டு. ஐரோப்பாவில் இத்தாலி இசைக்குச் சிறந்தது. ஐரோப்பா முழுதும் வழங்குவது ரோம-கிரேக்க இசையே. அவ் விசையே பண்டைக் காலத்தில் இங்கிலாந்திற்குச் சென்றது. ஆங்கில இசைக் குறியீடுகளெல்லாம் இலத்தீன்-கிரேக்கச் சொற்களே.

எ-டு: music Gk. mousike, gamut (Gk.), solo(It.), soprano(It.), chorus (L.,Gk.), choir (F.,L.Gk.), Tune.tone,Gk. tonos.

இங்ஙனமிருந்தும் மெட்டு வேறுபாட்டிற்காக ஓரிரு செருமானிய இத்தாலியப் பாட்டுகளைக் கேட்கிறார்களேயன்றி முற்றிலும் அயன்மொழிப் பாட்டைக் கேட்பதில்லை. ஆகையால், அயன்மொழிப் பாட்டைத் தழுவுமாறு பொருந்தாத ஆங்கில உவமங்கூறித் தமிழரை ஒருவர் ஏமாற்றப் பார்ப்பது தம் அறியாமையை வெளிப்படுத்துவதாகும். தெலுங்கர் வாளா (சும்மா) இருப்பவும், தெலுங்கறியாத, தமிழையே தாய்மொழியாகக் கொண்ட ஒரு சிறு குழுவார் இசைத்தமிழை எதிர்த்துக் கூக்குரலிடுவது அவர்க்குத் தமிழ்மீதுள்ள நச்சுப் பகைமையையன்றி வேறெதைக் காட்டுகின்றது! தமிழனாயிருந்தால் தமிழ்ப்பாட்டை வெறுக்கவும் முடியுமா?

தீட்டிய மரத்தில் கூர்பார்த்தலும் கொல்லத் தெருவில் ஊசி விற்றலும்

இந்து தேசத்து இசைக்கே இசைத்தமிழ்தான் அடிப்படை. முதலாவது இசைத்தமிழ் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. கேள்வியைச் ச்ருதி என்றும் நிலையை ஸ்தாய் என்றும் மொழிபெயர்த்தனர். பண்களுக்கெல்லாம்