உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீர்ப்பாளர் மகராசனார் திருவள்ளுவர்

61

என்னும் பதினொரு வெண்பாக்கள், கடைக்கழகப் புலவர் பதினொருவர் பெயரில் திருவள்ளுவ வெண்பா மாலையிற் காணப்படுகின்றன. அப் பதினொருவரும் உண்மையாய் அவற்றைப் பாடியிருப்பினும், அவர் ஆரிய வேதத்தைக் கற்றோ கேட்டோ அறிந்தவராகார். அறிந்தவராயின் அங்ஙனம் பாடியிரார். ஏனெனின், பல்வகைச் சிறுதெய்வ வழுத்துத் திரட்டாகிய வேதத்திற்கும் முழுமுதற் கடவுள் வணக்கத்தொடு கூடிய நான்மாண் பொருள் நூற்கும், ஒப்பு நோக்கற்குரிய பொருள் தொடர்பு ஒன்றுமில்லை.

இனி, இதற்கு நேர்மாறாக,

தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால்

-

ஆனா அறமுதலா அந்நான்கும் ஏனோர்க்(கு) ஊழி னுரைத்தார்க்கும் ஒண்ணீர் முகிலுக்கும் வாழியுல கென்னாற்று மற்று'

என்று நக்கீரர் பெயரிலும்,

அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்

திறந்தெரிந்து செப்பிய தேவை

-

மறந்தேயும்

வள்ளுவன் என்பானோர் பேதை யவன்வாய்ச்சொல் கொள்ளார் அறிவுடை யார்”

என்று மாமூலனார் பெயரிலும்,

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றென

எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி”

என்று கல்லாடர் பெயரிலும்,

'பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு

தெரிந்து திறந்தொறுஞ் சேரச்

சுருங்கிய

சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்

வல்லாரார் வள்ளுவரல் லால்”

என்று அரிசில்கிழார் பெயரிலும்,

ce

ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்

பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின்

-

போயொருத்தர்

வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்”

என்று நத்தத்தனார் பெயரிலும்,