உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வியாச வியல்

69

ஆகையால், நாகரிகமென்பது, செல்வர் வறியர் என்னும் இரு சாரார்க்கும் பொதுவான, துப்புரவும் ஒழுக்கமும் பற்றியதேயன்றி, செல்வர்க்கும் மேலையொழுக்கத்தார்க்குமே யுரிய பொருள்களின் அழகும் விலையுயர்வும்

பற்றியதன்று.

  • இக் குறியிட்ட பாகிகள் உயர்தரப் பாடசாலை மாணவர்க்கு வேண்டாதவை.

4. வியாசவகை

-

Classification of Essays

வியாசங்கள் ஒன்றன் வரலாறுரைப்பதும், ஒன்றை வருணிப்பதும், ஒன்றைக் கருதியுரைப்பதும்பற்றி வரலாறு, வருணணை, கருதியல் என மூவகைப்படும்.

1. வரலாறு Narrative Essay

வரலாற்று வியாசம் (1) கதை, (2) சரித்திரம் (History) (3) வாழ்க்கை வரலாறு (Biography), (4) நிகழ்ச்சி (Event), (5) உரையாட்டு அல்லது தருக்கம், (6) வழிப்போக்கு என ஆறுவகைப்படும்.

2. வருணணை Descriptive Essay

வருணணை வியாசம் (1) பொருள், (2) இடம், (3), காலம், (4) சினை, (5), குணம், (6) தொழில், (7) காட்சி, (8) நிகழ்ச்சி என எண்வகைப்படும்.

3. கருதியல் Reflective Essay

கருதியல் வியாசம் (1) அறிவுரை, (2) சீர்திருத்தம், (3) கண்டனம் அல்லது மறுப்பு, (4) நகைமொழி ( Wits and Humour), 5. உன்னம் (Imagination) என ஐவகைப்படும்.

நிகழ்ச்சி இரண்டனுள், முன்னது முன்னது உள்ளவாறுரைப்பது; பின்னது புனைந்துரைப்பது.

5. வியாசப் பொருள்கள் - Subjects for Composition 1. புலவர் – தொல்காப்பியர், திருவள்ளுவர், ஔவை, கம்பர் முதலியோர். 2. அரசர் - கரிகாலன், சேரன் செங்குட்டுவன் முதலியோர்.

3.

சிற்றரசர் – பாரி, விசுவநாத நாயக்கர் முதலியோர்.

4. சமயத்தலைவர் – புத்தர், ஏசுகிறிஸ்து, முகமது முதலியோர்.

5.

சமயத்தொண்டர்

முதலியோர்.

நால்வர், இராமாநுஜர், விவேகானந்தர்

6. பெருமக்கள் - பச்சையப்ப முதலியார், முத்துசாமி ஐயர் முதலியோர். சீர்திருத்தியர் - ராஜாராம் மோகன்ராய், காந்தியடிகள் முதலியோர். அடியார்

7.

8.

கண்ணப்பர், பட்டினத்தார் முதலியோர்.

9. கலைஞர் எடிசன், சந்திரபோஸ் முதலியோர்.