உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

18. இஞ்சி முரப்பு

பாவாணர் சில பண்டங்களை மிக விரும்பி யுண்ணுவார் என்பது அவர்தம் கடிதங்களால் புலப்படுகின்றன. அவற்றுள் ஒன்று இஞ்சி முரப்பு ஆகும்.

ம்

இஞ்சிக்குத் தமிழ் மருத்துவத்தில் சிறந்த இடம் உண்டு. இஞ்சியைத் தமிழ்மக்கள் விரும்பிய பயன்படுத்தியமை., கழகநூல் ஆட்சிகளாலே நன்கு தெளிவாகின்றது. 'இஞ்சிவேர்’ என்னும் சொல் அதன் பொருளோடு வெளிநாட்டு மக்களைக் கவர்ந்து பயன் படுத்தப்பட்டமை, பல்வேறு மொழிகளில் 'இஞ்சிவேர்’ என்பதைத் தழுவி அமைந்துள்ள பெயர்களாலேயே வெளிப் படும். புதுவகைக் குடிநீர்களுள், இஞ்சிச் சாற்றுக்கு இடம் இருத்தல் (சிஞ்சர்பீர்) வெளிப்படையானது. உடல் நலத்திற்கு மிக உகந்ததான இஞ்சியை விரும்பிப் பாவாணர் பயன் படுத்தியமை அவர்தம் சுவை விருப்பக் காட்டுவதுடன், மருத்துவ நோக்கையும் தெளிவிப்பதாம்.

சேலம் அன்பர் சின்னாண்டார்க்குப் பல கடிதங்களில் ஞ்சி முரப்பு வாங்கியனுப்பக் கேட்டுள்ளார். இஞ்சி முரப்பு வாங்கி யனுப்பக் கேட்டுள்ள கடிதச் செய்திகளிடையே தமிழாக்கச் சொற்கள் சில நமக்கு வாய்க்கின்றன. ஏறத்தாழ 12 ஆண்டுகள் பாவாணர் அதை விரும்பியுண்டமை கடிதங்களால் புலப்படுகின்றன. அதிலும், இன்ன கடையில் வாங்கவேண்டும்.

ன்ன

வகையில் செய்யப்பட்டது வேண்டும், இன்ன வகையில் அனுப்புதல் வேண்டும் என்றெல்லாம் குறித்துள்ளார். அதன் சுவையையும் நலப் பாட்டையும் கடிதங்களிலே

குறித்துள்ளார்.

29 கன்னி 2000 என்று நாளிட்ட கடிதத்தில் ."இன்றனுப்பிய இஞ்சி முரப்பு நன்றாயிருக்கிறது. உடனே நீண்ட நாட்கெடா திருக்குமாயின் முக்காற் புட்டியும், இருமாதங்கட்குப் பின் சுவை மணவலிகள் குன்றுமாயின் அரைப்புட்டியும் வாங்கி நன்றாய்ப் பொதிந்து பதிவஞ்சல் வாயிலாகவே அனுப்பிவைக்க” என்றெழுதி யுள்ளார்.