உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

66

97

29-5-64 அஞ்சலில் சவ்வாய் பேட்டை யிலேனும், கல்லூரிக்கெதிர்க் கடையிலேனும் இன்னும் ஈரிஞ்சியூறற் பலகை வாங்கிவைக்க” என்று குறிப்பிடுகிறார். சிலேட்டு என்பதைப் ட பலகையாக்கிக் கொள்கிறார். ஊறுகாயில் உள்ள சொல்லாட்சி இஞ்சி யூறற்குப் பயன்படுகின்றது!

சென்னைக்கு வரும்போது புலவர் சு.கு. (சு.கு. அருணாச்சலம்) செவ்வாய்ப்பேட்டை "இ.ஞ்சி முரப்பா வாங்கிவரச் சொல்க” (9- 6-65) என்கிறார்.

5-10-65 இலும் “இயலுமாயின் இரு பலகை இஞ்சி முரப்பா வும் வாங்கிவைக்க” என்கிறார்.

66

"தங்கள் இஞ்சி முரப்பாப் பொதிகை முந்தாநாள் மிக ஏமமான நிலையில் வந்து சேர்ந்தது. எல்லார்க்கும் பெரு மகிழ்ச்சியும் முழுப் பொந்திகையும்; மாநாட்டிற்கு வரும்போது இதே இஞ்சி முரப்பா இவ்வளவு கொண்டு வருக என்று 21-10-69இல் எழுதியுள்ளார்.

முரப்பு ‘முரப்பா' என்றும் சொல்லப்பட்டுள்ளது. மக்கள் வழக்கு ‘முரப்பா' என்பதுதானே! பார்சல் ‘பொதிகை' யாகத் திகழ்கின்றது. முழுதுறு திருப்பியாக இருந்தமை ‘முழுப் பொந் திகை' யாயிற்று!

3-12-69 (கஎ. நளி.2000) இல் வரைந்த திருமுகத்தில் “சென்ற ஆண்டு எனக்கு வாங்கிக் கொணர்ந்து கொடுத்த சிறப்பாக நெய்யிற் பதப்படுத்திய -உயர்விலை இஞ்சி முரப்பு கிடைப்பின் கண்ணாடிப் புட்டியில் முன்பு வாங்கின அளவிற்கு குறையாது வாங்கி வருக. பலகை முரப்பும் நான்கு வேண்டும்” என்றுள்ளார்.

இவையெல்லாம் காட்டுப்பாடியில் இருந்து எழுதிய கடிதங்கள். சென்னையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பில் அகர முதல் இயக்குநராக இருந்த காலத்திலும் சேலம் இஞ்சியூறல் தேட்டமாகி எழுதுகிறார். அப்பொழுது சென்னை -78, கலைஞர் கருணாநிதிநகர் எசு.பி. (S.P.) 57 இல் குடியிருந்தார்.

"இஞ்சியூறல் ஒருவகை கூட என்னிடமில்லை. அது எனக்கு மிகத்தேவை. சேலத்திற் போற் பதன்செய்தது வேறெங்கும் கிடைப்பதில்லை. அடுத்த முறை வரும்போது மூவகையும் வாங்கி வருக” என்று எழுதியுள்ளார்.

“இஞ்சியூறல் வகைகள் மருந்துப் பயனீடு ஆதலையும் ஒரு கடிதத்தில் பாவாணர் சுட்டியுள்ளார். அவர் மிதிபாகற்காயைக்