உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

பாடல்கள்

பாவாணர் கடிதங்கள் கறியாக்கி விரும்பியுண்டிருக்கிறார். அது தொல்லை தந்திருக் கிறது. அதற்கு மருந்தாக இஞ்சி யூறல் பயன்பட்டிருக்கிறது.

“மிதிபாகலை மிகுதியாக உண்டதனால் இம்மயக்கம் ஏற்பட்டதாக என்மகன் கருதுகின்றான். அதுவும் ஓரளவு உண்மையாக இருக்கலாம். தங்கள் இஞ்சி முரப்பாவை இன்றுதான் நிரம்பவுண்டேன். மிதிபாகலுண்பதையும் அடியோடு நிறுத்திவிட்டேன்” என்பது அச்செய்தி 8-7-70 இல் எழுதிய கடிதத்தில் உள்ளது.

சுவை விருப்பு தலைப்பட்டதேயன்றே! சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று வள்ளுவர் அடுக்கும் அடுக்கிலே தலைப் பட்டது சுவைதானே! உணவுப் பற்றிலும் உள்ளம் தோயாத து வள்ளலார் “தனித் தனி முக்கனி பிழிந்து” என்பதை எப்படிச் சுவைத்துப் பாடுகிறார்! 'தேனாய் இன்னமுதாய்' அல்லவோ இறைவனே மணி மொழியார்க்குச் சுவைப்பொருளாகின்றார்! இச்சுவை நாட்டம் இயற்கை வழிப்பட்டதே ஆதலால் பாவாணர் அனையரும் ஆட்பட்டிருந்தனர் எனத்தெளியலாம். அப்பால் வரும் ஊறுகாயும், கிழங்கும் இப்பாற்பட்டனவேயாம்.