உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

99

19. ஊறுகாயும் பிறவும்

தயிரும் மோரும் விரும்புபவர்க்கு ஊறுகாய்த் தேட்டமும் கூடவே இருக்கும். பாவாணரோ தயிரும் கெட்டிமோரும் மிக விரும்புபவர். ஆதலால், ஊறுகாயை விரும்புவதில் வியப்பில்லை. ஆனால், அவர் விரும்பிய ஊறுகாய் தனிச்சிறப்புடைய ஒரு வகையினதாகும். அதற்குப் பெயர் 'முளரி ஊறுகாய்' என்பது அவர் சூட்டிய பெயர். '(Rose) ஊறுகாய்' என்பது ஏனையோர் சொல்லும் பெயர்.

வரும்போது வைசியர் விடுதியில் எனக்குக் காரமில்லாத முளரி (Rose) ஊறுகாய் ஒரு புட்டி வாங்கி வருக. சுவைத்துப் பார்த்து வாங்குக. காரமாயிருந்தால் வேண்டாம். புட்டியென்றது ஆர்ளிக்கசுப் (Horlicks) புட்டி” என்பது 7-9-66 கடிதம்.

ஏதோவொரு மாத்திரையைப் பயன்படுத்தியிருக்கிறார் பாவாணர். மாத்திரையை ‘முகிழம்' என்கிறார். முகிழமாவது ‘கேப்செல்சு’ என்பதற்கு மொழியாக்கம். அதனையும் முளரி ஊறுகாயையும் வாங்கிவர ஒரு கடிதத்தில் குறித்துள்ளார்.

66

ன்னும் 25 முகிழங்களும், வைசியா உண்டிச்சாலையில் முளரி (Rose) ஊறுகாய் ஒரு புட்டியும் வாங்கி வருக” என்பது அது. நாள் 27-3-70.

66

பேருந்தில் சென்ற பாவாணருக்கு நாவறட்சி மிகுந்திருந்த தாம். அப்பொழுதில், “பிட்டுப்பழ (முாம்பழ) மட்டு (சர்பத்து) நினைவிற்கு” வந்ததாம்! அவர் நினைவுக்கு அது வரும் போதில், 'நித்தலின்பனார் புட்டி நிறையக் கெட்டிமோர் கொடுத்தனுப் பியது" நேரில் நின்றதாம்! இது 19-7-70இல் எழுதிய செய்திகள். கழக ஆட்சியாளர் வ.சு. அவர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்துக் கண்ட செய்தியும் பாவாணர் விருப்புகளை வெளிப்படுத்தும்.

வை

பாவாணர் நெல்லையில் நிகழ இருந்த ஒரு கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆங்குத் தமக்கு வேண்டுவன என்பதைச் சுட்டி வரைகின்றார். அவர் சேலத்தில் இருந்த காலச்செய்தி இது. நாள் 3-5-55.