உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

“பகலிற் பெரும்பகுதி படித்துக்கொண்டும் எழுதிக் கொண் டும் இருப்பேன். அதற்கு எட்டுணையும் இடைஞ்சல் இருத்தல் கூட ாது.

"உணவிற்கு மூவேளையும் மலைப்பழமும் மோர் அல்லது தயிரும் வேண்டும். திண்ணிய மோரன்றி நீர்மோர் ஆகாது

66

அதன் தொடர்பாக 6-5-55 இல் வரைந்த கடிதத்தில் 'காலைதொறும் வெந்நீரும் வேண்டும்” என்று சுட்டுகிறார்.

மலைப்பழமும் மோரும் தயிரும் வெந்நீரும் போன இடத்தில் போய்ப் பார்த்துக்கொள்ளக்கூடாதோ? என்ன இருந்தாலும் திட்டப் படுத்திக் கொள்வதால் கெட்டுப் போவதில்லையே! அங்கே போய் முட்டுப்பாடுறவும் நேரிடாதே!

இன்னொரு கடிதச் செய்தி; அது மேட்டுப்பாளையம் தமிழாசிரியர் திரு.பா. நாராயணன் அவர்களுக்குப் பாவாணர் 21-1-57இல் எழுதியது. பாவாணர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வாசகராகப் பணிசெய்துவந்த காலம் அது.

"தங்குவதற்கு ஒரு தனியறை வேண்டும். புழுங்கலரிசிப் புலாலுணவே எனக்கு ஏற்கும். புறாக்கறி கிடைப்பின் நன்று. இன்றேல் ஆட்டீரல் சமைப்பிக்க (சுவரொட்டியுடன்) உண்ட பின் மலைப்பழமேனும் செம்பேரி (Apple) யேனும். வேண்டும் என்பவை உறைவிடம் ஊண்பற்றிய அக்கடிதச் செய்திகள்.