உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

101

20. கிழங்கு வகைகள்

கிழங்கு வகைகளுள் முடிக் (மயிர்க்) கிழங்கு என்பது ஒன்று. அது சேலம், ஆற்றூர்ப் பகுதிகளில் நிரம்பக் கிடைப்பது. அது சிறு கிழங்கு வகையைச் சார்ந்தது. ஆயின் கருணைக் கிழங்குபோல் பெரியது. உருளைக்கிழங்குபோல் நிறம் வெளுத்தது. மெல்லிய வேர்கள் நிரம்ப இருத்தலால் அதனை, மயிர்க் கிழங்கு, முடிக்கிழங்கு என்று கூறுவர். பொதுமக்கள் வாயில் உ ரோமக்கிழங்கு' என வரும். அக்கிழங்கின் மேலும், பாவாணர்க்கு மிகுந்த பற்று இருந்திருக்கிறது. மிக விருப்பத்தோடு அவர் உண்ணுமவற்றுள் ஒன்றாக அஃது இருந்திருக்கிறது என்பது கடிதங்களால் விளங்குகின்றது. இக்கடிதங்கள் திரு. மி.மு.சி அவர்களுக்கு எழுதியவையே.

24-11-64இல் எழுதிய கடிதத்தில், “மயிர்க்கிழங்கு வந்து விட்டதா?” என்று வினாவுகின்றார். அது பருவத்தில் கிடைக்கும் கிழங்காயிற்றே; அதனால்,

மயிர்க்கிழங்கு பருத்ததாய் வாங்கிச் சிறுகோணியிற் பொதிந்த ஒரு மூங்கிற் கூடைக் குள்ளிட்டுத் தைத்து T.V.S. சரக்கியங்கிக் கடத்த (Transort) வாயிலாய் அனுப்பினால் மறு நாளே சேதமின்றி வந்து சேரும்” என்று 30-12-64இல் வரைந்தார்.

புலவர் சின்னாண்டார் துணைவியார், மகப்பேற்றுக்காக மருத்துவமனையில் இருந்தபொழுது, உடல் நலமும் குன்றி யிருந்தார். அந்நிலையிலும், மயிர்க்கிழங்கு வாங்கிப் பாவாணர்க்கு விடுத்திருந்தார் சின்னாண்டார். அப்போது அம் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டுவதில்லை என்பது பாவாணர் பெருந் தகையுள்ளம்.

அதனால்

“தாயும் தந்தையும் தானெனும் தம்பிரான் சேயைக் காத்தருள் சீரென இன்னினே தாயும் நோயறத் தண்ணருள் பொழிகென ஆயி ரம்மவன் அடியிணை வீழ்ந்தனம்'

என்று வாழ்த்துரைத்து,