உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

"தாய் நன்னிலையில் ல்லாதபோது மயிர்க்கிழங்கு வாங்கி அனுப்பியிருக்கக் கூடாது. ஆயினும், இவ்வட்டை சேரும்போது தாய் நலம்பெற்றிருக்குமென நம்புகின்றோம். உடனே தெரிவிக்க. மறுமொழி கண்டபின்தான் கிழங்கை உண்போம்” என்று மேற்கொள்ளும் ஒரு நோன்பையும் சுட்டு கின்றார். சேலத்திற்கும் காட்டுப் பாடிக்கும் இடைவெளி மிக இருக்கலாம்! உணர்வு நெஞ்சத்திற்கு இடைவெளி இறையும் இல்லையே! மறுமொழி கண்டபின் தான் கிழங்கை உண்போம்’ என்பதில் பாவாணர் நெஞ்சம் பளிச்சிடுகின்றதேயன்றோ!

இக்கடிதம் எழுதப்பட்ட நாள்7-1-65.

66

'மயிர்க்கிழங்கு எனக்கு மட்டுமன்றி என் மக்களெல் லாருக்கும் மிக விருப்பமே. ஆதலால் பருங்கிழங்கு விற்பனைக்கு வரும் நாளில் என்னைக் கேளாமலும் அனுப்பலாம்” என நிலை யாணை ஒன்றை 8-1-69இல் தருகின்றார்.

சிலர் விரும்பியுண்பதும், பலர் விரும்பாததும் ஆகிய கிழங்கு வேர்க்கிழங்கு. எளிய மக்களுக்கு உரியது என்று செல்வர் களால் ஒதுக்கவும் படுவது. ஊட்டம் ஒன்றும் இல்லாதது என்றும் ஒதுக்கிவைப்பாரும் உளர். இத்தகைய வேர்க் கிழங்கில் வேணவாக் கொண்டிருந்திருக்கிறார் பாவாணர்.

வேர்க்கிழங்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சீனிக்கிழங்கு என்றும் வழங்கப்படும்.

66

'வேர்க்கிழங்கு இன்னும் வந்திருக்கா தென்று கருது கின்றேன்” என்பது 7-9-66இல் உள்ள கடிதக் குறிப்பு. வந்திருப் பின் வாங்கியனுப்பவேண்டும் என்பது உட்கிடை என்பது

வெளிப்படை

7-1-67இல், "வேர்க்கிழங்கு தி.வி.எசு. வாயிலாய்ச் சேத மின்றி முன்பு வந்தது” என்பதைச் சுட்டுகிறார். இம் முறையில் வேறு வகையில் விடுக்கப்பட்ட வேர்க்கிழங்கு சேதத்திற்கு இடமாயிற்று என்பது குறிப்புப் பொருள்! “இன்றுதான் தங்கள் புத்தாண்டுப் பரிசும் எனக்கு மிக விருப்பமானதுமான வேர்க் கிழங்குக் கட்டை என்மகன் எடுத்தான். இன்றும் நாளையும் ஆசைதீர உண்பேன்” என்று வேர்க்கிழங்குக் காதலை வெளிப் படுத்துகிறார். இக்கடிதத்தின் நாள் 23-1-67

வேர்க்கிழங்கு கிடைப்பின் சென்ற ஆண்டு போல் அனுப்பி வைக்க ”என்று கட்டளையிடுகின்றார் 19-1-68 இல்!