உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

25. சிதறிய மணிகள்

பாவாணர் வாழ்வில் அமைந்த பல்துறைப் பல்செய்திகள் தம் அன்பர்களுக்கு அவ்வப்போது எழுதிய கடிதங்களின் இடை டையே பொதுளிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் ஒருங்கே தொகுத்து வகுத்துக் காணற்குரியவை எனினும், ஒரு சிலவற்றை இவண் காணலாம். பெரும்பாலும் இதில் வரும் செய்திகள் காலவாரி அடைவையுடையவை. பொருள் வாரி முறையோ, அகர வாரி முறையோ பெறுவனவல்ல.

தமிழ் கற்பித்தல்:

“தற்சமயம் ஒரு துரைசானிக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறேன்”

விற்க விரும்பாமை :

"Encyclopeedia

வே

று

வை விற்கவில்லை. இன்னும் கொஞ்சக் காலம் பயன்படுத்தவிரும்புகிறேன். விற்கும்போது எவர்க்கும் இன்றிக் கழகத்துக்கே விற்கிறேன். என் வறுமை மிகுதியே விற்க ஏவிற்று. ஆயினும் என் மனம் இசையவில்லை”2 வேலை விண்ணப்பம் :

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு பண்டித வேலைக்கு விண்ணப்பஞ் செய்திருக்கிறேன். தயைசெய்து திரு. சேதுப்பிள்ளையவர்கட்கு நேரிலேனும் திருச் சுப்பிரமணிய பிள்ளையவர்கள் மூலமேனும் எழுதிச் சிபார்சு பண்ணுவிக்க கட்டுரைக் கசடறை :

23

கட்டுரைக் கசடறை செவ்வையாய் முடிந்தது. பின்வரும் நிமித்தங்களுக்குட்பட்டீர்களானால் இன்னும் இரு வாரத் திற்குள் அனுப்பமுடியும். இல்லாவிடில் முடியாது. 1. தலைமை ஆபீசுக்கு (திருநெல்வேலிக்கு) அனுப்பாமல் அச்சிட வேண்டும். 2. ஒன்றையும் மாற்றக் கூடாது.4

1. 23-10-31 (வ.சு.)

3. 4-4-32 (வ.சு.)

2. 26-4-32 (வ.சு.)

4. 30-6-32 (வ.சு.)